ARTICLE AD BOX
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்; பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் , அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில்தான், இவரது குற்றப்பிண்ணனி குறித்த தகவல்களை வாக்குமூலமாக கொடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 24 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி ஆணையர் கிறிஸ்டியன் ஜெயசீல் , ஆய்வாளர் தீபக் குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.