ARTICLE AD BOX
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை மெரீனா உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெரீனா உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.