ARTICLE AD BOX
அட்லீ கொடுத்த வெற்றி.. மீண்டும் தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்?.. வேற லெவல்
மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் ஷாருக்கான் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி தென்னிந்திய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஷாருக்கான் கடைசியாக பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஜவான் படம்: இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

அட்லீயுடன் இன்னொரு படம்?: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வளவோ முயற்சி செய்தேன்.. என் மகன் என்பதால் சேர்க்கவில்லை.. எல்லாம் தலையெழுத்து.. தனுஷ் தந்தை ஓபன்
ஷாருக்கானின் புதிய படம்: ஷாருக்கான் இப்போது தி கிங் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ஜவான், பதான், டன்கி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அதே வைபை இதிலும் தக்க வைக்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். இதற்கிடையே பதான் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது. இதில் ஷாருக்கான், தீபிகா என முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்கவிருக்கிறார்கள். இந்நிலையில் ஷாருக்கான் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

புஷ்பா இயக்குநருடன் இணையும் ஷாருக்: அதாவது தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் இயக்குநர்கள் ஹிட்டுகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ உள்ளிட்டவர்கள் அதில் அடக்கம். மேலும் அனிமல் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் புஷ்பா, புஷ்பா 2 படங்களும் பாலிவுட் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பின. இதன் காரணமாக தென்னிந்திய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற பாலிவுட் ஹீரோக்கள் விரும்புவதாக சமீபத்தில் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் ஷாருக்கானும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புஷ்பா இயக்குநர் சுகுமாருடன் இணையும் முடிவில் அவர் இருப்பதாகவும்; விரைவில் அவரிடம் கதை கேட்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் தென்னிந்திய ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.