ARTICLE AD BOX

மும்மொழிக் கொள்கை என்று முழங்கி வந்த பாஜகவினர், திமுக மற்றும் தோழமை, எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவினர் வெளிப்படையாக இந்திக்கு ஆதரவு திரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டுள்ள பாஜக இந்திக்கு ஆதரவாக வித விதமான கருத்துக்களை கூறிவருகின்றனர். கும்மிடிப்பூண்டி தாண்டுனா ரயில் உன்னை திட்டினால் கூட புரியாது என்று இந்திக்கு ஆதரவு திரட்டுகிறார் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்.
பிரதமர் மோடி பேசுவதை நேரடியாக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே திமுக இந்தியை எதிர்க்கிறது என்கிறார் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் இராம சீனிவாசன்.
தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு படி மேலே போய், ரயில் நிலையத்திற்குச் சென்று இந்தியை அழிக்கும் உடன்பிறப்பே. உன் வீட்டிலேயே உள்ள ருபாய் தாளில் உள்ள இந்தியை அழித்துப் பார் என்று கூறியுள்ளார்.
உடன் பிறப்பே, சிரமப்பட வேண்டாம். உங்கள் வீட்டிலேயே இருக்கும் ஹிந்தியை தார் பூசி அழியுங்கள். pic.twitter.com/j7q99Jh812
— Narayanan Thirupathy (@narayanantbjp) February 24, 2025