அடுத்தடுத்து உயிரிழந்த 17 பேர்; காஷ்மீரில் நடப்பது என்ன? விதிக்கப்பட்ட தடை.!

3 hours ago
ARTICLE AD BOX

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டம், பதால் கிராமம், காஷ்மீரின் எல்லையோர பகுதியில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக, அங்குள்ள கிராமத்தில் வசித்து வந்த 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மர்மமான வகையில் உயிரிழந்தனர். கடந்த டிசம்பர் 07ல் தொடங்கி ஜன.19 வரை ஒருவர்பின் ஒருவர் என குடும்பத்தை சேர்ந்தவர்கள் 17 பேர் பலியாகி இருந்தனர். 

சிறப்புக்குழு விசாரணை

இவர்களின் மரணத்திற்கு காரணம் கண்டறியப்படாத நிலையில், அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை சிறப்புக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது வரை 17 பேரின் மரணம் மர்மமாக நீடிக்கிறது.

இதையும் படிங்க: கொதிக்கும் எண்ணெயில் விழுந்து 2 வயது சிறுவன் மரணம்; விளையாட்டு வினையான சோகம்.. சுப நிகழ்ச்சியில் துயரம்.!

தடை அமல்

இதனால் பதால் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பதால் கிராமம் 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அரசு & தனியார் நிகழ்ச்சி நடத்த, மக்கள் கூட தடை அமலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பம் வசித்து வந்த பகுதியில், பிற குடும்ப உறுப்பினர்கள் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பு கம்பியில் விளையாட்டுத்தனம்; 3 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.!

Read Entire Article