ARTICLE AD BOX
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக 59.5% வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக யாருக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற தேர்தல் வருகிற 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக களம் இறங்கியுள்ள நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போது திமுக- நாம் தமிழர் கட்சி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் முதலமைச்சராக வாய்ப்பு என பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 118 இடங்களில் 1470 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில்,
ஈரோடு கிழக்கு தேர்தலில் யாருக்கு ஓட்டு
திமுக - 59.5 %
நாதக -16.7 %
சுயேச்சைகள் - 1 %
நோட்டா- 2.3 %
அதே நேரத்தில் இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ள அதிமுகவின் வாக்குகளில் 39.2 விழுக்காட்டினர் திமுகவுக்கும், 19.5 விழுக்காட்டினர் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோல தேர்தலை புறக்கணித்துள்ள பாஜகவின் வாக்குகளில் 17.6 % திமுகவுக்கும் 57.9 % நாதகவுக்கும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்கு?
திமுக 33.3 %
அதிமுக 19.4 %
தவெக 18.7 %
நாதக 11.0 %
பாஜக 3.5 %
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் முதலமைச்சர்.?
மு.க.ஸ்டாலின்- 31.5 %
இபிஎஸ் - 20.2 %
விஜய் - 19.6 %
சீமான் 8.0 %
அண்ணாமலை 7.9 %