அடுத்த மாதம் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் ஆா்பிஐ!

3 hours ago
ARTICLE AD BOX

புதுதில்லி: ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் (ரெப்போ ரேட்), வங்கிகள் ரிசா்வ் வங்கியில் செலுத்த வேண்டிய தொகையின் சதவிகிதம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடா்பாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.6 சதவிகிதமாகக் குறைந்தது. மார்ச் மாதம் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. பணவீக்கம், கட்டுக்குள் வந்ததையடுத்து, அடுத்த மாதம் மத்திய வங்கி மற்றொரு வட்டி வீகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்பை இது உறுதிப்படுத்தியுள்ளதாக எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியில் இறங்கியுள்ள நிலையில், ஏப்ரல் மாத நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரெப்போ விகிதம் 6 சதவீதமாக உயரும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.

உணவுப் பணவாட்டம் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட சரிவே இதற்குக் காரணம். இருப்பினும் தானியங்கள், சர்க்கரை மற்றும் பழங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சா்வதேச அசாதாரண சூழல் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையிலேயே உள்ளது.

இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 19% உயா்வு

Read Entire Article