'அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம், கலாசாரத்தை விமர்சிக்கின்றனர்' - பிரதமர் மோடி

2 days ago
ARTICLE AD BOX

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள புற்றுநோய் மருத்துவ ஆராய்சி மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-

"நாட்டில் இன்று சில தலைவர்கள் மதத்தை கேலி செய்வதையும், மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் நாம் பார்த்து வருகிறோம். இவர்களைப் போன்ற நபர்களுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் ஆதரவளிக்கின்றன.

இந்து மதத்தை வெறுப்பவர்கள் அனைத்து காலகட்டங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அடிமை மனநிலை கொண்டவர்கள் நமது மதம், கலாசாரம், நம்பிக்கை, பண்பாடு மற்றும் பண்டிகைகளை விமர்சிக்கின்றனர்.

இயற்கையாகவே முற்போக்கு தன்மையை உடைய நமது மதம் மற்றும் கலாசாரத்தை அவர்கள் விமர்சனம் செய்கின்றனர். நமது சமூகத்தை பிரித்து, ஒற்றுமையை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Read Entire Article