ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தை உணராமல் அதிக அளவில் ரிஸ்க் எடுக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு வாலிபர் எறும்புகளை வேண்டுமென்றே கைகளில் கடிக்க வைத்து வீடியோ எடுக்கிறார்.
அந்த வாலிபர் எறும்புகள் இருக்கும் இடத்தை தேடிச் சென்று தன்னுடைய கைகளை அங்கு வைத்து வேண்டுமென்றே கடிக்க வைக்கிறார். பின்னர் அவர் வலியால் அலறி துடிக்கிறார்.மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.