'அடுத்தடுத்து ஒப்பந்தங்கள்' ட்ரம்பை இழுக்க முயலும் ரஷ்யா, உக்ரைன் - போர் முடிவுக்கு வருமா?

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது ரஷ்யா - உக்ரைன் போர். 'இந்தப் போர் முடிய வேண்டும்' என்று உலக நாடுகள் அனைத்தும் விரும்ப, 'நான் அதிபரானால் இந்தப் போரை நிறுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் செய்வேன்' என்று தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபரானதும் ட்ரம்ப் புதினிடம் பேசியது, இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தது என தன் பங்கிற்கு சில முயற்சிகளையும் செய்து வருகிறார் ட்ரம்ப்.

ரஷ்யா - உக்ரைன் போரில், உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா உதவ வேண்டுமானால் உக்ரைனில் உள்ள பாதி அளவிலான கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்த உக்ரைன் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போட்டார் ட்ரம்ப்.

புதின் ட்ரம்பின் நண்பர் என்பதால் புதினுக்கு ஆதரவாகவே முன்பிருந்து பேசிவருகிறார் ட்ரம்ப். 'அமெரிக்கா தங்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்' என்று புதின், ஜெலன்ஸ்கி ட்ரம்பை தாஜா செய்வதற்கான வேலையை செய்து வருகின்றனர் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

அதன் ஒரு பகுதியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் மாறி மாறி அமெரிக்காவிற்கு சலுகைகளை அள்ளி தெளிக்கின்றது.

போர் முடிவுக்கு வருமா?!

தற்போது ரஷ்யாவில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்க பயன்படுத்துவதற்கான பொருளாதார உடன்படிக்கை போட தயார் என்று அறிவித்துள்ளது ரஷ்ய அரசு.

இதுக்குறித்து புதின், "ரஷ்யா மற்றும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதியில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்க நிறுவனங்களுடன் ரஷ்ய அரசு இணைந்து செயல்பட தயாராக உள்ளது. உக்ரைனை விட ரஷ்யாவில் அதிக கனிமங்கள் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், அமெரிக்கா உடனான கனிம வள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது உக்ரைன். இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தகலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டு பக்கமும் இப்போது அமெரிக்காவிற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article