அடங்காத அசுரனின் அடுத்த ஆரம்பம்.. இளம் இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்

3 hours ago
ARTICLE AD BOX

Dhanush: தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஒரு ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். அவரே இயக்கி, நடித்த ராயன் படம் வெற்றியடைந்த நிலையில் நூறு கோடியை தாண்டி வசூல் பெற்றது. அதன் பிறகு அவர் இயக்கிய படம் தான் என் மேல் என்னடி கோபம்.

இந்தப் படம் பெரிய வரவேற்பு பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

இந்த சமயத்தில் தனுஷின் அடுத்த பட அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது தான் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

இளம் இயக்குனரின் படத்தில் நடிக்கப் போகும் தனுஷ்

இளம் இயக்குனரான இவர் அடுத்ததாக சிம்புவின் 51 ஆவது படத்தை எடுக்க உள்ளார். இதை அடுத்து தனுசுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் கூறி சம்மதம் வாங்கி விட்டாராம். இந்த படம் அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தனுஷ் எப்போதுமே தான் நடித்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து வருவது வழக்கம். ஆனால் இந்த முறை இளம் இயக்குனருடன் புதிதாக கூட்டணி போட இருக்கிறார். இந்த காம்போவும் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இப்போது இணையத்தில் அஸ்வத் மாரிமுத்து தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவருடைய கதை மற்றும் இயக்கம் ரசிகர்களுக்கு பிடித்து இருக்கிறது. அதனால் பெரிய நடிகர்களே அவருடைய படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Read Entire Article