ARTICLE AD BOX
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பல சேவைகளை வழங்குகின்றன. பணம் டெபாசிட், வைப்பு, கடன் உட்படப் பல சேவைகளை தனியார் மற்றும் அரசு வங்கிகள் வழங்குகின்றன. அஞ்சல் அலுவலகம் வெறும் கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவது மட்டுமல்ல. இந்த வேலையுடன் நிதி சேவைகளையும் வழங்குகிறது. இன்று அஞ்சல் அலுவலகங்கள் வங்கி போலவே செயல்படுகின்றன. சாதாரண மக்கள் அஞ்சல் அலுவலகங்களில் பணம் முதலீடு செய்ய முன்வருகின்றனர். இதன் மூலம் வங்கிகளுக்கு அஞ்சல் அலுவலகங்கள் கடும் போட்டியை அளிக்கின்றன.
அஞ்சல் அலுவலகத்தின் எந்த திட்டத்தில் பணம் முதலீடு செய்தாலும் அது பாதுகாப்பாக இருக்கும். இன்று நாம் சொல்லும் அஞ்சல் அலுவலக திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீட்டை வழங்குகிறது. எந்த ரிஸ்க்கும் இல்லாமல் நீங்கள் வட்டியின் மூலம் நல்ல பணம் பெறலாம்.
ரூ.1,000 முதலீடு செய்யலாம்!
அஞ்சல் அலுவலகத்தின் நேர வைப்பு (TD) திட்டம் முற்றிலும் வங்கி போலவே இருக்கும். அஞ்சல் அலுவலகத்தின் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் மற்றும் அதிகபட்சம் 5 வருடம் வரை முதலீடு செய்யலாம். வெறும் 1,000 ரூபாயில் இருந்து நேர வைப்பு கணக்கைத் தொடங்கலாம். நேர வைப்பு கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி கிடைக்கும். நீங்கள் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் அல்லது 5 வருடத்திற்கு நேர வைப்பு கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பணம் முதலீடு செய்ய எந்த வரம்பும் இல்லை.
2,00,000 ரூபாய்க்கு உத்தரவாதத்துடன் 29,776 ரூபாய் வட்டி
அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கில் 2 வருட முதலீட்டிற்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. ஒருவேளை டிடி திட்டத்தில் 2 வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 29,776 ரூபாய் வட்டி கிடைக்கும். இரண்டு வருடத்திற்குப் பிறகு உங்கள் மொத்த பணம் 2,29,776 ரூபாய் ஆகும். எந்த ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுக்கு உத்தரவாதமாக 29,776 ரூபாய் கூடுதல் பணம் கிடைக்கும். அஞ்சல் அலுவலக நேர வைப்பு கணக்கை சிங்கிள் அல்லது ஜாயிண்ட் ஆக திறக்கலாம். ஜாயிண்ட் அக்கவுண்டில் அதிகபட்சம் 3 பேர் பெயரை சேர்க்கலாம்.
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!