அஜித்தின் ஸ்டைலான லுக்.. GBU டீசரில் விஜயை கிண்டல் செய்கிறாரா?.. கதற தொடங்கிய ரசிகர்கள்!

4 hours ago
ARTICLE AD BOX

அஜித்தின் ஸ்டைலான லுக்.. GBU டீசரில் விஜயை கிண்டல் செய்கிறாரா?.. கதற தொடங்கிய ரசிகர்கள்!

News
oi-Pandidurai Theethaiah
| Published: Friday, February 28, 2025, 21:17 [IST]

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் சற்று முன் வெளியானது. ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தல பொங்கலாக மாறியுள்ளது. GBU படத்தின் டீசரில் பில்லா அஜித், அட்டகாசம் அஜித், மங்காத்தா என பல ரெபரன்ஸ்கள் இடம்பிடித்திருக்கின்றன. AK ரொம்ப பேட் ஆன நல்லவன் என்றும் அஜித் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. டார்லிங் மிஸ் யூ ஆல் என்று சொல்லும் அழகே தனிதான் போங்க என ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் தீயாக வேலை செய்து இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் வைப்புடன் இருக்கிறேன் என்று ஜி.வி.தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே படத்தின் டீசரில் தீ பற்றி கொண்டது. ரசிகர்கள் கொண்டாட்டம் அடங்கவில்லை.

good bad ugly movie teaser GBU teaser ajith

தரமான சம்பவம்: அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசரில் தரமான சம்பவம் இருப்பது போன்று தெரிகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு அஜித் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் ஜெயில், வெளிநாடு என உலகத்தை மிரட்டும் கேங்ஸ்டராக அஜித் இருப்பார் என டீஸர் மூலம் தெரிகிறது.

ரெட் டிராகன்: கேங்ஸ்டருக்கெல்லாம் பயத்தை காட்டும் ரெட் டிராகன் அஜித். அவன் போடும் ரூல்ஸை பிரேக் செய்கிறான் என வரும் வசனங்களின் பின்னணியில் அஜித்தின் மாஸ் என்ட்ரி விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்சம் கூட சோர்வை தராத தரமான டீசராக வெளியாகியுள்ளது என அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர். இப்படத்தில், பில்லா, மங்காத்தா, அட்டகாசம் என பல்வேறு கெட்டப்களில் அஜித் தோன்றுகிறார்.

கிண்டல்: டீசரில் துப்பாக்கியும், AK வுடன் வரும் ஸ்டார்களும் ரகளை கட்டுகிறது. இது எல்லாம் ஓகே ஆனால் விஜயை கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம்பெறுவது தேவையா என ரசிகர்கள் கேட்க தொடங்கியுள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், தெறி படத்தில் விஜய் செய்யும் ஸ்டைலிஷான காட்சியை அஜித் கிண்டல் செய்வது நியாயமா என விஜய் ரசிகர்கள் குமுறுகின்றனர்.

good bad ugly movie teaser GBU teaser ajith

கெட்டவன்: எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அப்பப்போ நாம கெட்டவன் என்பதை காட்டனும் பேபி என்று அஜித் சொல்லும் வசனங்கள் தரமாக இருக்கிறது. GBU ரசிகர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக வந்துள்ளது என்றே தெரிவிக்கின்றனர். டீசர் முழுக்க ரசிகரின் ஒன்மேன் ஷோ ஆட்டம் தான் தொடர்கிறது. சுனில் அவருக்கு நண்பராக வருவார் என்பது போல் தெரிகிறது. காமன் ஆன மனுஷனுக்கு வரும் என்ட்ரி அல்ல உலகமே காத்திருக்கும் வெற்றி என வசனங்கள் தெறிக்க விடுகின்றன. கடைசி நிமிடத்தில் தனது ரசிகர்களுக்கு மிஸ் யூ ஆல் என முடிவடைகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: ajith அஜித்
English summary
teaser of Good Bad Ugly starring Ajith, அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Read Entire Article