"கார்டன் சிட்டி ஆஃப் இந்தியா" என அழைக்கப்படும் பெங்களூரு நகரம் ஒரு நவீனமும், வரலாற்று பழமையும் கலந்த ஒரு நகரமாகும். வருடம் முழுவதும் அனைத்து சீசன்களிலும் பெங்களூருவிற்கு டூர் செல்பவர்கள் ஏராளம். பரபரப்பான தொழில் நகரமான பெங்களூருவை சுற்றிப் பார்க்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பலரும் செல்வதற்கு என்ன காரணம்? அங்கு அப்படி என்ன தான் இருக்கிறது? என்ன காரணத்திற்காக சுற்றுலா பயணிகளுக்கு பெங்களூரு நகரை பிடிக்கிறது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் சுற்றுலா பயணிகள் சொல்லும் பதில்கள் இதோ...

இதமான வானிலை
வருடம் முழவதும் நிலவும் பெங்களூருவின் மிதமான காலநிலை எந்த நேரத்திலும் பார்வையிட சிறந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. கோடை காலத்தில் கூட மாலை நேரங்கள் மிகவும் குளிர்ச்சியாகவும், தென்றல் வீசும் இதத்தை தந்து கொண்டே இருக்கும்.
பசுமையான பூங்காக்கள், தோட்டங்கள்
பெங்களூருவில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் இடங்களாக பல பூங்காக்கள் உள்ளன. அவற்றின் முக்கியமானது தாவரவியல் பூங்கா, கப்பன் பூங்கா மற்றும் பன்னேர்கட்டா தேசிய பூங்கா போன்ற இடங்களாகும். இவை நகர்ப்புற இரைச்சலில் இருந்து விலகி, அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் கண்டு களிக்க ஏற்ற இடங்கள் ஆகும்.

செழிப்பான கஃபே கலாச்சாரம்
பெங்களூரு நகரம் இந்தியாவின் பப் தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அற்புதமான கைவினை பீர் காட்சிக்கு பெயர் பெற்றது. டோயிட், ஆர்பர் ப்ரூயிங் மற்றும் ப்ரூவ்ஸ்கி போன்ற பிரபலமான இடங்கள் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை அதிகம் இருக்கின்றன.
தொழில்நுட்ப ஆலைகள் :
எலக்ட்ரானிக் சிட்டி மான்யதா டெக் பார்க் போன்ற நவீன ஐடி மையங்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களை இந்த நகரத்திற்கு ஈர்க்கின்றன.
வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்கள்
பெங்களூரு அரண்மனை, திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பழமையான கடந்த காலத்தின் அரச கட்டிடக்கலையின் அழகையும் பிரதிபலிக்கும் காளை கோவில் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்வையிடுகிறார்கள்.

உணவு பிரியர்களின் சொர்க்கம்
உணவு பிரியர்களின் சொர்க்கமாக உள்ளது இந்த பெங்களூரு நகரம். இங்குள்ள வித்யார்த்தி பவானியில் உள்ள தென்னிந்திய தோசைகள் மிகப் பிரபலம். வி வி புரத்தில் உள்ள உணவுத் தெருவில் உள்ள ஸ்ட்ரீட் புட்கள், இந்திரா நகரில் உள்ள உலகளாவிய உணவு வகைகள் இங்கு வரும் உணவு பிரியர்களை கவரும் விதமாக உள்ளது.
ஷாப்பிங்
இங்கு யுபி சிட்டி போன்ற ஆடம்பர மால்கள் முதல் கமர்ஷியல் ஸ்ட்ரீட் மற்றும் சிக்பெட் மார்க்கெட்டில் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஷாப்பிங் வரை இந்த பெங்களூரு நகரத்தில் உள்ளது. இது அங்கு வரும் பயணிகளுக்கு புதுமையான ஷாப்பிங் அனுபவங்களை தருகிறது.
பிரமிக்க வைக்கும் சுற்றுலா தலங்கள்
நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க வாரத்தின் இறுதி நாட்களில் பலரும் விரும்பி செல்லும் இடங்களில் நந்தி மலைகள், கூர்க், சிக்மகளூரு மற்றும் மைசூரு போன்ற இடங்கள் உள்ளன. இந்த விரைவான பயணங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். நீர் வீழ்ச்சிகள், மலைகள், இயற்கை அழகை ரசிக்கும் பல சுற்றுலா தலங்கள் பெங்களூருவிற்கு மிக அருகிலேயே உள்ளன.
டைனமிக் இசை, கலைக்காட்சி
இங்கு வரும் இசை ஆர்வலர்கள், தி ஹம்மிங் ட்ரீ மற்றும் ஹார்ட் ராக் கஃபே போன்ற பிரபலமான இடங்களில் நேரடி இசை நிகழ்ச்சிகள், ஜாஸ் இரவுகள் மற்றும் EDM போன்ற பல விழாக்களை கண்டு ரசிக்கலாம்.
நட்பு மற்றும் காஸ்மோபாலிட்டன் வைப்
இந்த நகரம் கலாச்சாரங்களின் கலவையாகும். இது இந்தியாவின் மிக வரவேற்கத்தக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாக அமைகிறது. நாடு முழுவதிலிருந்து வரும் மக்கள் இதை தங்கள் தாயகமாகவே கருதிகிறார்கள்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet