அசரடிக்கும் Specs.. ஆடிப்போக வைக்கும் Price.. 4 புதிய 14-இன்ச் HP AI லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்!

1 day ago
ARTICLE AD BOX

அசரடிக்கும் Specs.. ஆடிப்போக வைக்கும் Price.. 4 புதிய 14-இன்ச் HP AI லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்!

News
oi-Muthuraj
| Published: Tuesday, March 18, 2025, 10:54 [IST]

எச்பி (HP) நிறுவனம் அதன் எலைட்புக் சீரீஸின் கீழ் 4 புதிய லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4 மாடல்களுமே 14 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. அதென்ன மாடல்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளன? இதோ விவரங்கள்:

என்னென்ன மாடல்கள்?
01. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a)
02. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i)
03. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i)
04. 14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i)

4 புதிய 14-இன்ச் HP AI லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்!

என்ன விலைக்கு அறிமுமாகும் செய்யப்பட்டுள்ளன? 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a Price in India) ஆனது இந்தியாவில் ரூ 2,21,723 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது க்ளேஸியர் சில்வர் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.

14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i Price in India) இந்தியாவில் ரூ 2,22,456 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.

14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i Price in India) இந்தியாவில் ரூ 2,58,989 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்

14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i Price in India) இந்தியாவில் ரூ 2,67,223 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும். இந்த 4 புதிய லேப்டாப் மாடல்களுமே ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும் என்று ஹெச்பி நிறுவனம் கூறியுள்ளது.

14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ முக்கிய அம்சங்கள்:
- இது ஒரு ஏஐ பிஸ்னஸ் நோட்புக் ஆகும்
- 120 ஹெர்ட்ஸ் 3K OLED டிஸ்பிளே
- ஹாப்டிக் டிராக்பேட்
- இன்டல் கோர் அல்ட்ரா 5 மற்றும் 7 (சீரீஸ் 2) சிப்கள்
- 48 TOPS வரை NPU செயல்திறன்
- 9 மெகாபிக்சல் கேமரா
- டூயல் மைக்ரோஃபோன்கள்

14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ மற்றும் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ முக்கிய அம்சங்கள்:
- 48 TOPS வரை NPU செயல்திறன்
- இன்டல் கோர் அல்ட்ரா 5 மற்றும் 7 (சீரீஸ் 2) சிப்கள்
- 1.4 கிலோ எடை
- லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட்கள்
- எச்பி ரீசார்ஜபிள் ஆக்டிவ் பென் சப்போர்ட்
- எச்பி சுயர் சென்ஸ் ஏஐ
- எச்பி எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி கண்ட்ரோலர்

14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ முக்கிய அம்சங்கள்:
- எச்பி-யின் இந்த புதிய ஏஐ பிசி சீரீஸில் இதுதான் மலிவான மாடல் ஆகும்
- ஏஎம்டி ரைஸன் 7 ப்ரோ மற்றும் 9 ப்ரோ சிப்கள்
- 55 TOPS NPU செயல்திறன்
- ஏஐ செயலாக்கத்தைக் கையாள 8000 Mbps இல் இயங்கும் 64GB LPDDR5x ரேம்

- 40W தெர்மல் டிசைன் பவர் (TDP) உடனான எச்பி ஸ்மார்ட் சென்ஸ்
- வெப்ப செயல்திறனைப் பராமரிக்க டூயல் டர்போ ஹை டென்சிட்டி பேன்ஸ்
- பேக்கிரவுண்ட் அட்ஜெட்ஸ்மென்ட்ஸ் மற்றும் ஆட்டோ ஃப்ரேமிங் போன்ற அம்சங்களை கொண்ட பாலி கேமரா ப்ரோ சூட்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
HP Launched New AI Laptops EliteBook X G1a X G1i X Flip G1i Ultra G1i in India Price Specifications
Read Entire Article