ARTICLE AD BOX
வறுவலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிக்ஸ்ட் வெஜிடபிள் ப்ரையை தண்ணி சாம்பார், பருப்பு ரசம், சாதாரண ரசம் அனைத்திற்கும் தொட்டு கொண்டால் சாப்பிடுவது இன்பம் பயப்பதாக இருக்கும். இவற்றுக்கு ஏற்றார்போல் இரண்டு வறுவல் வகைகளைப் பார்ப்போம்!
மிக்ஸ்ட் வெஜிடபிள் ப்ரை
செய்ய தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது- அரை கப்
கேரட் பொடியாக நறுக்கியது- அரை கப்
பச்சை மிளகாய், -3 கீறியது
மெலிதாக நறுக்கிய குடைமிளகாய்- அரை கப்
பீன்ஸ் பொடியாக நறுக்கியது-5
அரிசி மாவு-அரை கப்
கார்ன்மாவு- அரை கப்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரிசி மாவு, கார்ன் மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசறி சிறிது தண்ணீர் தெளித்து நல்ல கெட்டியாக பிசைந்து வைத்து விடவும் .ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து பிசைந்த கலவையிலிருந்து சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மிக்ஸ்ட் வெஜிடபிள் ஃப்ரை சுவையாக இருக்கும்.
பேபி கார்ன் ஃப்ரை
செய்ய தேவையான பொருட்கள்:
நீள வாக்கில் நறுக்கிய பேபி கார்ன்- 15
மைதா -மூணு டேபிள் ஸ்பூன்
கார்ன்பிளவர்- 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு -ஒரு டீஸ்பூன்
முட்டை- அரை
மிளகாய்ப் பொடி- ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பேபி கார்னுடன் மைதா, கான்பிளார், அரிசி மாவு, முட்டை, மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பிசையவும். பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, கொதித்த பின்பு பேபி கார்னை ஒவ்வொரு துண்டுகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்பு இறக்கியதும் மொறு மொறு என ஆகியவுடன் எடுத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். சும்மா சாப்பிட்டாலும் ருசி அள்ளும். தொடுகறியாக எடுத்துக்கொண்டாலும் மிகவும் நன்றாகவே இருக்கும். செய்து அசத்துங்க.