அக்சய் குமாருக்கு கம்பேக் படமாக அமைந்த 'ஸ்கை போர்ஸ்'

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். சமீபத்தில் இவரின் நடிப்பில் "ஓஎம்ஜி -2, சர்பிரா, கேல் கேல் மெய்ன் மற்றும் சிங்கம் அகெய்ன்" ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

இதற்கிடையில், பிஷேக் அனில் கபூர் மற்றும் சந்தீப் கெவ்லானி ஆகியோரால் இயக்கப்பட்ட 'ஸ்கை போர்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நிம்ரத் கவுர் , சாரா அலி கான் மற்றும் வீர் பஹாரியா ஆகியோர் அக்சய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளன. இந்தியாவின் முதல் மற்றும் மிகக் கொடிய வான்வழித் தாக்குதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. கடந்த மாதம் 24-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியானது.

அக்சய் குமார் நடிப்பில் வெளி வந்த கடந்த சில படங்கள் அந்த அளவிற்கு வரவேற்பை பெறாதநிலையில், தற்போது ஸ்கை போர்ஸ் அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமைந்திருக்கிறது. அதன்படி, இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 153 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read Entire Article