ARTICLE AD BOX
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம்.. ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் ரௌடி பேபியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆயிஷா.காதல் பின்னணியை மையமாக கொண்ட இந்த தொடரில் ஆண் போல,சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ஆயிஷா, தற்போது ஹீரோயினாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்ன ரோலில் நடித்து வந்த ஆயிஷா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபொன்மகள் வந்தாள்' என்ற சீரியலில் தான் முதல் முதலில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, மாயா என்ற சீரியலில் நடித்தார். அந்த தொடர் மூலம் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து. இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்திருந்தார். ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிந்துரா பிந்து' என்ற ஒடியா மொழி சீரியலின் மறு ஆக்கம் தான் இந்த சத்யா சீரியல். அந்த தொடரில் நடிகை ஆயிஷாவின் துணிச்சலான நடிப்பால், மனம் கவர்ந்த நடிகையாக மாறிய நடிகை ஆயிஷாபிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த வீட்டில், 63 நாட்கள் இருந்தார்.
நடிகை ஆயிஷா: இதை அடுத்து, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உப்பு புளி காரம் என்ற சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்திருந்தார். உப்பு புளி காரம் என் வெப் தொடரை இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கி உள்ளார். இந்த தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா என பலர் நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவு மையமாக வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத் தொடர் இளைஞர்களுக்கு மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரை பிரபல நிறுவனமான விகடன் தயாரித்துள்ளது.
ஹீரோ யார் தெரியுமா: இந்நிலையில், நடிகை ஆயிஷா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணவனுக்கு ஆயிஷாவுக்கு ஜோடியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மூலம், நடிகை ஆயிஷா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜாபர் இப்படத்தை இயக்குகிறார்.