அக்கா மகனுக்காக மீண்டும் களமிறங்கும் தனுஷ்!.. ஆனா இதுல ஒரு டிவிஸ்ட்டு!..

7 hours ago
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் ஒரு பன்முக கலைஞராக இருந்து வருகிறார் தனுஷ். நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக என பன்முக கலைஞராக கலக்கி வருகிறார். அதுவும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் இவர்தான் இப்போது டாப்பில் இருக்கும் கோலிவுட் நடிகர். ஹாலிவுட் படத்திலும் நடித்து உலகளவில் பேர் வாங்கிய தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார் தனுஷ்.

பவர் பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராயன் திரைப்படத்தை இயக்கினார் தனுஷ். அந்தப் படத்தில் அவர் முக்கியமான கேரக்டரிலும் நடித்தார். படம் பெரிய அளவில் எதிர்பார்த்து ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் தனுஷ் இயக்கத்தில் வெற்றிமாறன் சாயலில் ஒரு படைப்பை பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கினார்.

இந்தப் படத்தின் மூலம் தன் அக்கா மகனை அறிமுகம் செய்தார். அவர் பெயர் பவிஷ். பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தார். இந்தப் படத்தை தனுஷ் உண்டர் பார் நிறுவனம் தான் தயாரித்தது.ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டடித்தது. இதோடு மோதிய டிராகன் திரைப்படம் உச்சக்கட்ட வெற்றியை பெற்றது.

இந்தப் படத்தின் விழாவில் பவிஷ் தனுஷை பற்றி கூறும் போது என் வாழ்க்கையில் முக்கியமான நபராக இருக்கக் கூடியவர் தனுஷ். அவர் எனக்காக பண்ண விஷயங்களுக்கு அவருக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது. படத்தின் படப்பிடிப்பின் போது அவரை படுத்தின பாட்டுக்கு ஸாரி சொல்லிக்கிறேன் என்றெல்லாம் கூறினார். இந்த நிலையில் அடுத்ததாக பவிஷ் நடிக்க கூடிய ஒரு படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அக்கா மகனுக்காக தனுஷும் பவிஷுடன் சேர்ந்து கதை கேட்டு வருகிறாராம் .சமீபத்தில் கூட பிரசாத் முருகேஷனிடம் கதை கேட்டிருக்கிறாராம். இவர் ஏற்கனவே சசிகுமாரை வைத்து கிடாரி என்ற படத்தை இயக்கியவர். அதோடு மத்தளம் என்ற பெயரில் வெப் தொடர் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இவருடன் இணைந்துதான் பவிஷ் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Read Entire Article