ஃபிளாப் பட இயக்குனரிடம் மகனை ஒப்படைத்த ஷங்கர்.. இதெல்லாம் சரியா வருமா?....

9 hours ago
ARTICLE AD BOX

Direcor Shankar: ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட் என்பதால் தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களையே இயக்க அதுவே அவரின் அடையாளமாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் ஷங்கரே நினைத்தாலும் மினிமம் பட்ஜெட்டில் படங்களை இயக்க முடியாது என்கிற நிலை உருவானது.

இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர். ரசிகர்கள் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்க துவங்கினார்கள். தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தியவர் இவர்.

இப்போது படமெடுக்கும் பல இளம் இயக்குனர்களும் ஷங்கரின் ரசிகர்களாக இருந்தவர்கள்தான். ரஜினியை வைத்து எந்திரன், சிவாஜி, 2.0 போன்ற படங்களை இயக்கினார். கமலை வைத்து இவர் இயக்கிய இந்தியன் படம் இப்போதும் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கிறது. அதேநேரம், கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் தோல்வி அடைந்துவிட்டது.


எனவே, ஷங்கர் டிரெண்டிங்கில் இல்லை. அவரின் ஃபார்முலா இனிமேல் வொர்க் அவுட் ஆகாது என்றெல்லாம் பலரும் பேசி வருகிறார்கள். அவர்களின் வாயை அடைக்கும்படி விரைவில் ஒரு ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் அவரின் வீட்டிலேயே ஒரு ஹீரோ உருவாகிவிட்டார்.

ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர்தான் அந்த ஹீரோ. இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் அர்ஜித். இந்தியன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் அக்கா அதிதி ஷங்கருடன் இணைந்து நடனமும் ஆடியிருந்தார். இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே ஆசை.


தான் எடுக்கும் பிரம்மாண்ட கதைகள் மகனுக்கு செட் ஆகாது என்பதால் பிரபுதேவாவிடம் ஒப்படைத்துவிட்டார் ஷங்கர். பிரபுதேவா இயக்கத்தில் அர்ஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளார். பிரபுதேவாவை காதலன் படம் மூலம் நடிகராக்கியவர் ஷங்கர். அந்த நன்றி கடனுக்காக இந்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும், விஜயை வைத்து போக்கிரி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். ஹிந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார் ஆகியோரை வைத்து படம் இயக்கியவர்.

அதேநேரம், ஒரு நடிகராக பெரிய வெற்றியை கொடுத்தவர் இல்லை பிரபுதேவா. கடந்த பல வருடங்களாகவே அவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே ஃபிளாப்தான். மேலும், கடந்த சில வருடங்களில் அவர் இயக்கிய தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. ஆனாலு,ம் அவரை நம்பி மகனை ஒப்படைத்திருக்கிறார் ஷங்கர்.

Read Entire Article