ARTICLE AD BOX

Fire Movie: மாடலிங் துறையில் இருந்தவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஜிம் பாடி என்பதால் அதை வைத்தே மற்றவர்களை அடிப்பது போல உடல் மொழி காட்டுவார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவருக்கும், நடிகர் ஆதிக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் வந்தது.
பிக்பாஸ் வாய்ப்பு: இவருக்கு அடிக்கடி கமலும் அறிவுரைகள் சொன்னார். பிக்பாஸ் வீட்டில் அவருடன் இருந்த கவர்ச்சி கன்னி ஷிவானி நாராயணனுடன் அவ்வப்போது ரொமான்ஸ் செய்து வந்தார். இறுதிக்கட்டத்தில் பாலாஜியும், ஆதியும் போட்டியாளர்களாக இருக்க ஆதியை வின்னராக அறிவித்தார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் டிவிட்டரில் எல்லோருடனும் சண்டை போட்டு வந்தார் பாலாஜி. ஆளும் கட்சியை திட்டி டிவிட் போட்டு சர்ச்சையை ஏற்பத்துவார். இவரின் நடிப்பில் சமீபத்தில் ஃபயர் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
ஃபயர் திரைப்படம்: பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டு ஏமாற்றும் நபராக பாலாஜி நடித்திருந்தார். நாகர்கோவிலில் இதுபோன்ற வேலைகளை செய்து வந்த காசியின் கதை இது எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ரச்சிதா காட்டியிருக்கும் கவர்ச்சி காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஃபயர் பட வசூல்: எனவே, சென்னையில் 15 தியேட்டர்களில் மட்டும் வெளியான இந்த படம் காஜி ரசிகர்களின் ஆதரவால் 65 தியேட்டர்களாக அதிகரிக்கப்பட்டு ஓரளவுக்கு வசூலையும் பெற்று வருகிறது. இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் காரில் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஃபயர் படம் நன்றாக இருப்பதாக சொல்ல ‘நடு ரோட்ல ஃபயர் ரிவ்யூ’ என பதிவிட்டு அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் பாலாஜி.

பாலாஜி கட்டிய அபராதம்: இதைப்பார்த்த சென்னை போக்குவரத்து துறை போலீசார் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அந்த இரண்டு பேருக்கும் தலா ஆயிரம் என 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதைக்கண்டு பதறிய பாலாஜி ’இதற்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு பதில் நானே அந்த அபராத தொகையை கட்டிவிடுகிறேன்’ என சொல்லி 2 ஆயிரம் ரூபாயை கட்டிவிட்டார். அவர் பணம் கட்டிய சலானை போக்குவரத்துறை போலீசார் அந்த பதிவின் கமெண்ட்டில் பகிர்ந்துள்ளார்கள்.