ARTICLE AD BOX
Yuvan : ஸ்வீட் ஹார்ட் .. ஜெயித்துக் காட்டிய ரியோ.. ஹேப்பி மோடில் யுவன்.. ஒரே பாராட்டு மழை..
சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். இந்த படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரியோவின் முந்தைய படமான ஜோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து படத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்வீட் ஹார்ட் படத்தை பொறுத்தவரையில் படம் பார்த்த பலரும் இந்த படம் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால், படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிட்டது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே படத்தை ஓடிடி தளத்தில் நல்ல விலைக்கு விற்று விட்டதால், படக்குழு பெரிய லாபத்துடன் நிம்மதியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ' ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியான. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், 'படம் நன்றாக இருக்கிறது' என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யுவன்: இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக்குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
பாராட்டு: காதலர்களுக்கிடையே ஏற்படும் உரசலும், விரிசலும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமான பின்னணியிலும் விவரித்திருப்பதால் இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக காதலர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சி: தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா படக்குழுவினரை பாராட்டியுள்ளதால், படக்குழுவினர் செம மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா படத்தை முதலில் பார்த்துவிட்டு, இந்த படம் கட்டாயம் ஒர்க்-அவுட் ஆகும் எனவே, தைரியமாக இருக்கலாம் எனக் கூறினாராம். மேலும் இதேபோல் ஃபீல் குட் எண்ணம் கொடுக்க கூடிய கதைகள் இருந்தால் தானே தயாரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தாராம். இதனால் இயக்குநர் ஸ்வீநித் சுகுமார் மகிழ்ச்சியில் உள்ளார் என கூறப்படுகிறது.
