WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?

17 hours ago
ARTICLE AD BOX

WPL 2025 Finale MI Vs DC:  நடப்பாண்டு பிரீமியர் லீகில் எந்தெந்த விராங்கனைகள் என்ன விருதுகளை வென்றனர் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மும்பை அணிக்கான பரிசுத்தொகை:

பிரபோர்ன் மைதானத்தில் பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இறுதிப்போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன்களான மும்பை அணிக்கு ரூ.6 கோடி கணிசமான பரிசுத் தொகையும், இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்படும். இருப்பினும், இந்த ஆண்டுக்கான  பரிசுத் தொகை BCCI-யால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு இறுதிப் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை இவை. இதுவே நடப்பு சீசனிலும் தொடரும் என கூறப்படுகிறது.

விருதுகளை தட்டி தூக்கிய வீராங்கனைகள்:

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட மும்பை அணியின் நாட் ஸ்கைவர் தொடர் நாயகி விருது வென்றார்

இறுதிப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த்யு அரைசதம் விளாசிய மும்பை கேப்டன் ஹர்மன் ஆட்டநாயகி விருது வென்றார்.

இந்த எடிஷனில் அதிக ரன்கள் சேர்த்த வீராங்கனைக்கான ஆரஞ்சு தொப்பியை மும்பை அணியின் நாட் ஸ்கைவர் (523 ரன்கள்) வென்றார்

இந்த எடிஷனின் அதிக மதிப்புமிக்க வீராங்கனை என்ற விருதையும் மும்பை அணியின் நாட் ஸ்கைவர் வென்றார்

இந்த எடிஷனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனைக்கான ஊதா நிற தொப்பியை மும்பை அணியின் அமிலியா கெர் (18 விக்கெட்டுகள்) வென்றார்

இந்த எடிஷனின் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை மும்பை அணியின் அமன்ஜோத் கவுர் வென்றார்

ஃபேண்டசி லீக் எனும் புள்ளிகள் பட்டியலிலும் மும்பை அணியின் நாட் ஸ்கைவர் முதலிடம் பெற்று பட்டம் வென்றார்

டெல்லி அணியின் காப்பி சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.

That Trophy Lifting Moment! 🏆 🙌

Mumbai Indians captain Harmanpreet Kaur receives the #TATAWPL Trophy 🏆 from the hands of Mr Roger Binny, President, BCCI and Mr Devajit Saikia, Honorary Secretary, BCCI 👏 👏#Final | #DCvMI | @lonsaikia | @mipaltan | @ImHarmanpreet pic.twitter.com/amwiH8R3ED
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2025

போட்டி சுருக்கம்:

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.  ஹர்மன்ப்ரீத் கவுரின் 66 ரன்களாலும், நாட் ஸ்கைவர்-பிரண்டின் 30 ரன்களாலும் அந்த அண் 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மரிசான் காம்ப் மற்றும் நிகி பிரசாத் ஆகியோரின் கடைசி நேரத்தில் போராடினாலும், 20 ஓவர்கள் முடிவ்ல் அந்த அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி இரண்டாவது முறையாக கோப்பயை கைப்பற்றியது

Read Entire Article