What to watch on Theatre: பெருசு, ராபர், Sweetheart - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

8 hours ago
ARTICLE AD BOX

பெருசு (தமிழ்)

பெருசு

இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் குமார், பால சரவணன், முனிஷ்காந்த், சந்தினி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பெருசு'. தந்தையின் மரணத்தைச் சுற்றி நடக்கும் காமெடி, கலாட்டா திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sweetheart (தமிழ்)

Sweetheart

ஸ்வினீத் சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Sweetheart'. காதலி கர்ப்பமாகிவிட, அதைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள்தான் இத்திரைப்படம். காதல், காமெடி, எமோஷனல் நிறைந்த இத்திரைப்படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராபர் (தமிழ்)

ராபர்

எஸ்.எம்.பாண்டி இயக்கத்தில் `மெட்ரோ' சத்யா, டேனியல், தீபா சங்கர், ஜெயபிராகாஷ், சென்றாயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராபர்'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (தமிழ்)

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

'ஏப்ரல் மாதத்தில்', 'மனசெல்லாம்', 'சதுரங்கம்', 'நண்பன்' என பல திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீகாந்த்.  ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘கீதாஞ்சலி’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தில் நடித்திருக்கிறார். காதல், ரொமாண்டிக் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மாடன் கொடை விழா (தமிழ்)

மாடன் கொடை விழா (தமிழ்)

தங்கபாண்டி இயக்கத்தில் கோகுல் கெளதம், சூப்பர் குட் சுப்பிரமணி, ஷருமிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாடன் கொடை விழா'. கண்டுகொள்ளப்படாமல் ஊருக்குள் இருக்கும் நாட்டார் தெய்வத்திற்கு கொடை விழா நடத்தத் தவிக்கிறார் கதாநாயகன். அதைச்சுற்றி கிராமத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்தான் இத்திரைப்படம். இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வருணன் (தமிழ்)

வருணன் (தமிழ்)

ஜெயவேல்முருகு இயக்கத்தில் ராதாரவி, சரண்ராஜ், துஷ்யன்ந்த், கேப்ரில்லா, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வருணன்'. குடிநீரைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (தமிழ்) ரீ-ரிலிஸ்

’ஜெயம்’ ரவி - மோகன் ராஜா கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம், ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’. அம்மா பாசம், தந்தை ஏக்கம், ஜாலியான காதல், விவேக்கின் அக்மார்க் காமெடிகள் என தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட இத்திரைப்படம் இன்று (மார்ச் 14) மீண்டு ரீ-ரிலீஸாகிறது.

``ஓடாதுன்னு சொன்ன சிலபேர்; எக்ஸ்ட்ரா 50 நாள் ஓடும்னு சொன்ன அவர்..!" - மோகன் ராஜா #15YearsOfMKumaran

Dexter (மலையாளம், தமிழ்)

Dexter

சூர்யன் ஜி இயக்கத்தில் ராஜிவ் கோவிந்தா, அபிஷேக் ஜோசப், ஹரீஷ் பெராடி, ஷோபா பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Dexter'. சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Dilruba (தெலுங்கு)

Dilruba

விஷ்வ கருண் இயக்கத்தில் கிரண், ருக்‌ஷர், கதே டவிஷன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Dilruba'. ஆக்‌ஷன், ரொமாண்டிக் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Court: State vs A Nobody (தெலுங்கு)

Court: State vs A Nobody

ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் பிரியதர்ஷினி புலிகொண்டா, ஹார்ஷ் ரோஷன், ஶ்ரீதேவி அபெல்லா, சாய்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Court: State vs A Nobody'. நீதிமன்ற வழக்கு விசாரணையை மையமாகக் கொண்ட திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Diplomat (இந்தி)

The Diplomat

ஷிவம் நாயர் இயக்கத்தில் ஜான் அப்ரகாம், சதியா கதீப், குமுட் மிஷ்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Diplomat'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

My Melbourne (ஆங்கிலம், பெங்காலி, இந்தி)

My Melbourne

இம்தியாஸ் அலி இயக்கத்தில் அருஷி ஷர்மா, காட் ஸ்டிவர்ட், ஜாக்‌ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'My Melbourne'. பாலினம், இனவாதம், உறவுச் சிக்கல்கள் உள்ளிட்டவற்றைப் பேசும் இத்திரைப்படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Novocaine (ஆங்கிலம்)

Novocaine

ராபர்ட் ஒல்சன் இயக்கத்தில் ஜாக் குவயிட், ஆம்பர், ராய் நிக்கோல்ஷன், ஜக்கோப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Novocaine'. ஆக்‌ஷன், காமெடி, திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

In the Lost Lands (ஆங்கிலம்)

In the Lost Lands

பால் ஆண்டர்ஷன் இயக்கத்தில் மில்லா ஜோவாவிச், பட்டிஸ்டா, ஆர்லே ஜோவர், ஆம்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'In the Lost Lands'. மாயாஜாலங்கள் பேண்டஸி, ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Day The Earth Blew Up: A Looney Tunes Movie (ஆங்கிலம்)

The Day The Earth Blew Up: A Looney Tunes Movie

பீட்டர் பிரவுன்கட் இயக்கத்தில் எரிக் பவுஷா, கேண்டி மில்லோ, பீட்டர் மெக்நிக்கோல் உள்ளிட்டோர் நடிப்பில் அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த 'The Day The Earth Blew Up: A Looney Tunes Movie'. ஏலியன்களால் மூன்று நண்பர்கள் சந்திக்கும் அலப்பறைகளை மையமாகக் கொண்ட ஜாலியான திரைப்படமான இது இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Read Entire Article