Walking Types: இந்த 8 வகையான நடைப்பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? இதில் உங்களுக்கு சிறந்தது எது!

3 hours ago
ARTICLE AD BOX

நடைபயிற்சி என்பது 30 வயதை கடந்த, ஒவ்வொருவரும், கட்டாயம் அவர்களின் வாழ்க்கையில் செயல்படுத்த கூடிய ஒரு பயிற்சி. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து நீங்கள் பணியாற்றுபவர் என்றால், நடைப்பயிற்சி செய்வது உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

நடைப்பயிற்சி தினமும் குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை செய்வதால்,  இது கலோரிகளை எரிக்கவும், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் இதில் உள்ள மற்ற சில வகையான நடைப்பயிற்சிகள் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதோடு, உங்களின்  உடலுக்கு மற்ற சில நற்பலன்களையும் கொடுக்க வல்லது. அந்த வகையில், தற்போது நடைப்பயிற்சியில் உள்ள 8 வகை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. சாதாரண நடைப்பயணம்.

காலை நேரத்தில், பல பெண்கள் மற்றும் ஆண்கள் பார்க் மற்றும் வீட்டில் உள்ள மொட்டை மாடியில்  நடப்பதை பார்த்திருப்போம். இது ஒரு சாதாரண நடைபயிற்சியாக பார்க்கப்படுகிறது. இதனை  'ஆம்பிள்' என்று அழைக்கிறார்கள். இந்த சாதாரண நடைப்பயிற்சியை தனியாக செய்வதற்கு பதில் நண்பர்கள், குடும்பத்தினருடன் உரையாடியபடி வெளியே இயற்க்கை சூழலுடன் நடப்பது உங்களை மேலும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் இந்த வகை நடைப்பயிற்சியில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே எரிக்கப்படும். 70 வயதை கடந்தவர்கள், கால்வலி உள்ளவர்களுக்கு இந்த வகையான சாதாரண நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும்.

2. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

இந்த வகை நடைப்பயிற்சி  உங்கள் சராசரி நடைப்பயிற்சி வேகத்தை விட கூடுதல் வேகத்துடன் நடப்பதாகும். அணைத்து வயதினருக்கும் இந்த விறுவிறுப்பான நடைப்பயிற்சி பொருந்தும். இதில் சாதாரண நடைப்பயிற்சியை விட 2 மடங்கு அதிக கலோரிகளை எரிக்கவும், உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மிகவும் சவாலான நடைப்பயிற்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள விரும்பும் இளம் ரசிகர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

அடேங்கப்பா! வெறும் 2000 காலடிகள் வாக்கிங்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

3. நடைபயணம்:

நடைப்பயணத்தை சமீப காலமாக பலரும் விரும்புவது இல்லை. காரணம், கார் - பைக் போன்ற நவீன ஊர்திகள் வந்துவிட்டதால், 1 கிலோ மீட்டர் கூட யாரும் நடக்க விரும்புவது இல்லை. உங்களின் அலுவலகம் அல்லது உறவினர்களின் வீடுகள் சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தால், அவர்களின் வீட்டுக்கு நடைபயணமாக சென்று வாருங்கள். சிலர் நடந்து செல்வதை அந்தஸ்து குறைவாக கருதினாலும்... உண்மையில் இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆம் ஒரு வாரத்திற்கு 2 முறையாவது சில கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செல்வது, உங்களுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்களின் பாதங்கள் வலுப்பெறும். இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கும். அதே போல் உடல் எடையை குறைக்க விரும்புவார்களுக்கும்  நடைபயணம் சிறந்த தேர்வாக இருக்கும்.

4. பாதை நடைப்பயிற்சி:

பாதை நடைப்பயிற்சி, நண்பர்களுடன் செல்ல சிறந்த தேர்வாக இருக்கும். காட்டு பகுதி, மலை கிராமம், கடலோர பகுதிகளில் இதை பலர் மேற்கொள்கிறார்கள். இயற்கையை எழில் சூழ்ந்த இடத்தில் நடப்பது, உங்களின் மனதிற்கு அமைதியை கொடுக்கும். அதே போல் இது உங்களின் தசைகளை வலுவாக மாற்றும் தன்மை கொண்டது. சமீப காலமாக இளைஞர்கள் பலர் இந்த நடைப்பயிற்சி முறையை வீக் எண்டு டேஸில் அதிகம் விரும்புகிறார்கள். 

5. மலையேற்றம்:

பாதை மலையேற்றம் போல், பல இளைஞர்கள் தற்போது மலை ஏற்றத்திலும் ஆர்வம் காட்டுகிறார்கள். மலையில் ஏறுவது கொஞ்சம் கடினமானது  என்பதால், முறையாக ட்ரக்கிங் பயிற்சி பெற்றவர்களுடன் மலை பாதையில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறையில் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதோடு, மன ஆரோக்கியம், இருதய ஆரோக்கியம் மற்றும் சகிப்பு தன்மை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'.. இத்தனை நோய்களை விரட்டுமா?

6. பவர் வாக்கிங்:

இந்த வகை நடைப்பயிற்சியில் நீங்கள் ஓடாமல் முடிந்தவரை வேகமாக நடப்பது. அதே நேரத்தில் உங்கள் கைகளைப் பயன்படுத்தி உங்களை முன்னோக்கி நகர்த்தி செல்லும், உங்கள் மையப் பகுதியை ஈடுபாட்டுடன் வைத்திருப்பது. பவர் வாக்கிங்  செய்வதன் மூலம்,  உங்களின் கலோரிகள் மிக வேகமாக குறையும். வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்களுக்கு இது மிக சிறந்த தேர்வாக இருக்கும்.

7. நோர்டிக் நடைபயிற்சி:

நோர்டிக் நடைபயிற்சி என்பது ஒரு வித்தியாசமான வாக்கிங் முறையாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் கால்களை மட்டும் அல்ல கைகளையும் மிகவும் ஆக்ட்டிவாக வைத்து கொள்வது. இரண்டு கைகளிலும் குச்சியை வைத்து கொண்டு, அதை முன்னோக்கி வைத்து கொண்டே பின்னால் செல்வது. இந்த உடல்பயிற்சி முறை இந்தியாவை விட வெளிநாடுகளில் மிகவும் பிரபலம் ஆகும். குச்சிக்கும் அழுத்தம் கொடுத்து நடப்பதால், மூட்டு வலை உள்ளவர்களுடன் இந்த நடைபயிற்சியை செய்வது எளிது. 

காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

8. பந்தய நடைபயிற்சி:

இந்த நடைப்பயிற்சி  ஆரம்ப நிலை நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும், வயநாதவர்களுக்கும் கண்டிப்பாக ஏற்றது அல்ல. பந்தய நடைபயிற்சி மிக வேகமாக நடப்பது ஆகும். எல்லா நேரங்களிலும் ஒரு காலை தரையில் ஊன்றி நிற்பது போன்ற கடுமையான விதிகள் இந்த நடைப்பயிற்சி முறையில் உள்ளது. இந்த வகை நடைபயிற்சி, நன்கு ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர்களுக்கும், நடைப்பயிற்சி போட்டியில் பங்குபெற விரும்புவர்களுக்கு ஏற்ற ஒன்றாக உள்ளது. இது கிட்ட தட்ட ஓட்டத்திற்கு சமமாதானது என்பதால், இது அதிகப்படியான கலோரிகளை குறைக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article