சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் ஐந்தாவது குரூப்-ஸ்டேஜ் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன . மற்ற போட்டிகளைப் போல் இல்லாமல் இரு நாடுகளின் ரசிகர்களும் IND vs PAK மோதலை பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காண்பார்கள்.

கோலி-பாபர் சந்திப்பு:

என்ன தான் மைதானத்திற்கு வெளியே இரு நாடுகளின் ரசிகர்களும் எப்போதும் பிளவுபட்டிருந்தாலும், இரு நாடுகளின் பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இடையே ஒரு மனதைக் கவரும் தருணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Virat Kohli and Babar Azam before the match start.

- Beautiful pictures from Dubai..!!!! ❤️ pic.twitter.com/lJLVXY9mRs

— Praveen kumar (@Naninaidu98) February 23, 2025

, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதலுக்கு முன்னதாக, விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். பாபர் அசாம் மற்றும் இமாம்-உல்-ஹக்குடன் தொடக்க வீரராக களமிறங்கியபோது, கோஹ்லி அவரை அன்பான அரவணைப்புடன் வரவேற்றார். இரண்டு பேட்டிங் ஜாம்பவான்களுக்கும் இடையிலான அன்பான சந்திப்பு ரசிகர்களிடையிடையே பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் சொதப்பல் பேட்டிங்:

பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் நல்ல தொடக்கம் தந்தனர், ஆனால் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் விளையாடிய சவுத் ஷகீல் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டது.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர் ஆனால் ரிஸ்வான் மோசமான ஷாட் ஆடி அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். அதன் பின்னர் விக்கெட்டுகள் மளமளவென் விழுந்தது. பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 2 விக்கெட்டும், ராணா, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.