ARTICLE AD BOX
யானை ஒன்று சாலையில் வரும் வாகனங்களில் இருந்து தனக்கான உணவை பெற்றுக் கொள்ளும் காட்சி வைரலாகி வருகின்றது.
விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
யானைகள் சிறுகுழந்தைகள் போன்று தனது காவலாளி கூறுவதை அப்படியே கேட்டு நடப்பதையும் நாம் அவதானித்திருப்போம்.
இங்கு யானை ஒன்று தனக்கான பசியை போக்குவதற்கு சாலை வழிபறியில் ஈடுபட்டுள்ளது. குறித்த காட்சியில் ஒவ்வொரு வாகனமும் நின்று யானைக்கு உணவை கொடுத்துவிட்டு செல்கின்றது.
என்னதான் இருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதர்கள் தனக்கான உணவை கண்டிப்பாக உட்கொள்ளும் நிலையில், ஐந்தறிவு ஜீவனும் தனக்கான பசிக்கு தன்னுடைய வழியை தெரிவு செய்து கொள்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |