Vijay: தவெக தலைவர் விஜய் முதலில் Press-அ சந்திக்கட்டும்.. விஷால் என்ன இப்படி சொல்றாரு!

4 hours ago
ARTICLE AD BOX

Vijay: தவெக தலைவர் விஜய் முதலில் Press-அ சந்திக்கட்டும்.. விஷால் என்ன இப்படி சொல்றாரு!

News
oi-Mohanraj Thangavel
| Published: Tuesday, March 4, 2025, 6:28 [IST]

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, கடந்த மாதம் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். மேலும் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷாலிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாகவும், இனி முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்த போவதாகவும், தற்போது உள்ள கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு அதாவது தான் ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்து விட்டு, முழுநேரமும் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

Vijay Vishal Thalapathy

விஜய் கட்சி தொடங்கியதால் அவரது ரசிகர்களின் ஆதரவு, அவருக்கு பெருமளவு கிடைக்கும் என பலரும் கூறினார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதால், அவரது ரசிகர்களே வாக்கு அளிப்பார்களா என்று கேள்விகள் எழுந்தது. தனது கட்சி மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியானது. விஜய் இன்னும் கள அரசியலுக்கு வரவில்லை என விமர்சனங்கள் எழுந்தபோது, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்றார்.

ஜன நாயகன்: தமிழ்நாடு முழுவதும் தனது கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதற்கிடையில் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் நடித்து வருகிறார். இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

விஜய்: இந்நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக விஜய் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும் போது, " விஜய் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும். என்னிடம் கேட்பதை விடவும் அவரிடமே கேட்பது சிறந்தது. விஜய் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்" என பதில் அளித்தார்.

விஷால்: அதேபோல், ஹிந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு, " எந்த ஒரு விஷயத்தையும் திணித்தால் அது வெற்றி அடையாது. சட்டம் வேண்டுமானாலும் கொண்டு வரலாமே தவிர, அது நடைமுறைக்கு ஒத்துவராது" என பதில் அளித்தார். விஷால் விஜய் குறித்து கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் விஜய் இன்னும் செய்தியாளர்களை சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vishal Answers Goes Trending About Thalapathy Vijay TVK
Read Entire Article