ARTICLE AD BOX
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.
கெட்டி மேளம் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியை நினைத்து அப்செட்டில் இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அண்ணி மீனாட்சி வெற்றியிடம் ஏன் தம்பி அப்செட்டா இருக்கீங்க என்று கேட்க அவனும் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறான். ஆனால் மீனாட்சி எனக்கு தெரியும் தம்பி துளசியை நினைத்து தானே என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான்.
அஞ்சலியை அன்பாக கவனிக்கும் மகேஷ்
மேலும் மீனாட்சி அது துளசியோட குழந்தை இல்ல என்று உண்மையை சொல்ல வெற்றி நிம்மதி அடைகிறான். மறுபக்கம் மகேஷ் தனது கையால் அஞ்சலிக்கு காபி போட்டு கொடுக்கிறான்.
எல்லா பாத்திரங்களையும் சுத்தமாக கழுவி வீட்டை சுத்தமாக வைத்து கொள்கிறான். எனக்கு எல்லாம் சுத்தமாக இருக்கனும்.. வச்ச பொருள் வச்ச இடத்தில் இருக்கனும். ஏதாவது இடம் மாறினா எனக்கு பிடிக்காது என்று சொல்கிறான்.
லட்சுமி வீட்டிற்கு வரும் வெற்றி
மேலும் நான் இந்த செடிகள் கூட எல்லாம் பேசுவேன். இதுதான் எனக்கு துணை என்று சொல்கிறான். அடுத்து வெற்றி லட்சுமி வீட்டிற்குள் நுழைந்து யாரும் தெரியாமல் துளசி குழந்தையை தூங்க வைப்பதை மறைந்திருந்து பார்க்கிறான்.
துளசிக்கு யாரோ இருப்பது போல் பீலாக வெற்றி அங்கிருந்து வெளியேறி விடுகிறான். அடுத்து மகேஷ் ரூமில் காத்துக்கொண்டிருக்க அஞ்சலி கையில் பாலுடன் ரூமுக்குள் நுழைகிறாள். இருவரும் ரொமான்டிக்கா பேசி ஒருவரை ஒருவர் நெருங்க அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அஞ்சலி மீது ஏற அஞ்சலி அலறி சத்தம் போட மகேஷ் அந்த கரப்பான் பூச்சியை கையால் பிடிக்கிறான்.
என் அஞ்சலியை இந்த உலகத்துல என்ன தவிர வேற யாரும் தொட கூடாது என்று சொல்லி அந்த கரப்பான் பூச்சியை பாலில் முக்கி முக்கி எடுத்து கடையில் அதை பாலில் போட்டு குடிக்க அஞ்சலி அதிர்ச்சியும் பயமும் அடைகிறாள்.
பிறகு மகேஷ் என் அம்மா மடியில் படுத்ததே இல்ல என்று சொல்லி அஞ்சலி மடியில் தலை வைத்து தூங்குகிறான். மறுபக்கம் சிவராம் வீட்டில் எல்லாரும் அஞ்சலி எப்படி இருக்களோ, என்ன பன்றாளோ என்று அவளது பிரிவை பற்றி பேசி வருந்துகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | Anora OTT: 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா‘ படம்! எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | விமலின் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் ! டீசர் வெளியானது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ