ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், ரியாலிட்டி டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் இடம்பெறும் மூன்று நடுவர்களில் ஒருவராக வரலட்சுமி உள்ளார்.
ஆக்சன் காட்சியின்போது காயம்
சினிமா ஷுட்டிங்கில் ஒன்றில் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டபோது கட்ட விரலில் வரலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ பகிர்ந்திருந்தார் வரலட்சுமி. அதில், தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு கட்டை விரலில் கட்டு போட்டிருக்கும் வரலட்சுமி, கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் வழக்கமான பணிக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வரலட்சுமியின் காதலர் நிக்கோலாய் முதல் மனைவி கவிதா யார்?
திருமணத்துக்கு பின்னரும் நடிப்பில் கவனம்
கடந்த ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை வரலட்சுமி. திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ஷிவாங்கி லயனெய் என்ற படத்தில் நடித்து வரும் இவர், விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே, விஜய்யுடன் இணைந்து சர்கார் படத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. இந்த படத்தில் அரசியவாதியாக வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டினார். அந்த வகையில் ஜனநாயகன் படத்திலும் வரலட்சுமியின் கதாபாத்திரம் பவர்புல்லாக இருக்கலாம் என்றே தெரிகிறது.
இவர் விஷால் ஜோடியாக கடந்த 2013இல் நடித்து பெட்டிக்குள் முடங்கி கிடந்த மதகஜராஜா படம், இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக வெளியானது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனதுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளைப்பியது.
மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் இணைந்து மற்றொரு ஹீரோயினாக தோன்றிய வரலட்சுமி, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருந்தார்.
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு
சமீபத்தில் நடிகை வரலட்சுமி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். 40 வயதை நெருங்கிய தமிழ் நடிகையாக மாறியிருக்கும் வரலட்சுமி, சென்னை எழும்பூரில் உள்ள சைலண்ட் கேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடி. அப்போது அவர், "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்தும் மருத்துவர்களோடு என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை செய்துள்ளேன்.
மேலும் படிக்க: மதகஜராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மல்லுகட்ட தயாரான சந்தானம்
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இருப்பதில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த சிறிய உதவியை செய்தால் கூட போதும் . அதே போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் இருந்து கல்கத்தா வரை சைக்கிளில் பயணம் செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். தொடர்ந்து கணவருடன் வசித்து வரும் ஹைதராபாத்திலும் ஹெல்பிங் ஹேண்ட் என்ற குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அங்கு பிறந்தநாள் கொண்ட்டியுள்ளார்.

டாபிக்ஸ்