ஆண்டிபட்டியில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக குறைந்து காணப்படுகின்றது. மீண்டும் தமிழகத்தில் மழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வைகை அணை அமைந்துள்ளது. தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை திகழ்ந்து வருகின்றது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் பொழுது விவசாய நிலங்கள் பாசனம் பெரும் வகையில் கால்வாய்கள் அமைந்துள்ளது. மேலும் பருவமழையின்போது ஆண்டுதோறும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக உயர்வதும் தாழ்வதுமாக காணப்பட்டு வந்தது. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து உயர்ந்து காணப்பட்ட நிலையில் திடீரென மழையின் அளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடியை தொட்டுள்ளது.

சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை

அணையில் இருந்து மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்ட உடனே அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. வைகை அணையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பிப்ரவரி இரண்டாம் தேதி வைகை அணை நீர்மட்டம் 65.37 அடியாக காணப்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து 427 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து 519 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் நீர் இருப்பு 4713 மில்லியன் கன அடியாக காணப்பட்டது.

CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”

வைகை அணையின் இன்றைய நிலவரம் அதனை தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.09 அடியாகவும், நீர்வரத்து 239 கனடியாக இருந்த நிலையில் நீர் திறப்பு குறைந்து 669 கன அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 4221 மில்லியன் கன அடியாக காணப்பட்டது. மீண்டும் தமிழகத்தில் மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.

முல்லை பெரியாறு அணை:
நிலை-116.90(142) அடி
கொள்ளளவு:2069Mcft
வரத்து: 17கனஅடி
வெளியேற்றம்:400கியூசெக்

மஞ்சலார் அணை :

நிலை - 39.05(57) அடி
கொள்ளளவு : 143.38 Mcft
வரத்து: 17 கனஅடி
வெளியேற்றம்: 75கியூசெக்

சோத்துப்பாறை அணை :

நிலை- 84.95 (126.28) அடி
கொள்ளளவு: 43.91Mcft
நீர்வரத்து: 0கனஅடி
வெளியேற்றம்: 25 கனஅடி

சண்முகநதி அணை :

நிலை - 27.60(52.55)அடி
கொள்ளளவு: 19.13 Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 14.47 கியூசெக்.