USAID பஞ்சாயத்து.. சர்ச்சையில் சிக்கும் இந்தியாவின் வீணா ரெட்டி! யார் இவர்? முழு விவரம்

3 days ago
ARTICLE AD BOX

USAID பஞ்சாயத்து.. சர்ச்சையில் சிக்கும் இந்தியாவின் வீணா ரெட்டி! யார் இவர்? முழு விவரம்

New York
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவில் தேர்தல்களில் வாக்காளர்களை அதிக அளவில் பங்கெடுக்க வைக்க அமெரிக்கா ஒதுக்கியிருந்த 2.1 கோடி டாலர் நிதி தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிதி, பாஜக தலைமையிலான மத்திய அரசை அகற்ற பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாஜக ராஜ்ய சபா எம்பியும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். குறிப்பாக 2021-2024 வரை USAID இந்தியா தலைவராக இருந்த வீணா ரெட்டிக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Veena Reddy USAID India BJP Investigation Allegations Controversy US-India Relations Political Demand Foreign Aid USAID USAID

தனது x தளத்தில், "கடந்த 2021-2024 வரை USAID இந்தியா தலைவராக இருந்த வீணா ரெட்டி, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவுக்கு வந்திருந்தார். ஆனால் தேர்தல் முடிந்த கையுடன் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அவர் இந்தியாவில் இருந்தபோது, இங்கிருந்த விசாரணை அமைப்புகள், USAID பணம் யாருக்காக பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கேள்வியை கேட்டிருக்கலாம். மட்டுமல்லாது அவர், அமெரிக்க தூதருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார்.

இவர் குற்றம்சாட்டும் வீணா ரெட்டி யார்? இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கே வசித்து வருகிறார். அமெரிக்க வெளியுறவு சேவையின் மூத்த தொழில் உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது பூட்டானிலும் USAID தலைவராக பணியாற்றியிருக்கிறார். இந்த பொறுப்புகளை வகித்த முதல் இந்திய-அமெரிக்கர் இவர்தான்.

மட்டுமல்லாது கம்போடியாவில் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகிய துறைகளில் திட்டங்களை மேற்பார்வையிடும் மிஷன் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். ஹைட்டியில் துணை மிஷன் இயக்குநராக இருந்த இவர், நிலநடுக்கத்திற்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.

கல்வியை பொறுத்த அளவில், கொலம்பியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டராகப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் கலை முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். தவிர நியூயார்க், லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவியை செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 1961 ஆம் ஆண்டு அப்போதைய அதிபராக இருந்த ஜான் ஆப் கண்ணாடியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 60களில் இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை. எனவே வாக்காளர்களை தேர்தலில் அதிக அளவு பங்கெடுக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு முதன் முதலில் தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீட்ட ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில் காங்கிரஸ் அதனை மறுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
The $21 million fund allocated by the United States to increase voter participation in Indian elections has now been canceled. However, allegations have emerged that the funds provided earlier were used to remove the BJP-led central government.
Read Entire Article