ARTICLE AD BOX
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பிப்ரவரி 18 அன்று சிவில் சர்வீசஸ் 2025 முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை பிப்ரவரி 21 வரை நீட்டித்தது. முன்னதாக கமிஷன் விண்ணப்ப தேதியை பிப்ரவரி 18 வரை நீட்டித்து இருந்தது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
சிவில் சர்வீசஸ் (முதல்நிலை)-2025 மற்றும் இந்திய வனப் பணி (முதல்நிலை)-2025 தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி “21.02.2025 (மாலை 6 மணி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விண்ணப்பச் சாளரம் மூடப்பட்ட அடுத்த நாளிலிருந்து அதாவது 22.02.2025 முதல் 28.02.2025 வரை ஏழு நாட்கள் வரை" விண்ணப்பதாரர்களுக்கு ஒரு திருத்தச் சாளரம் திறந்திருக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 11, 2025 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் upsconline.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய ஆட்சி பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) போன்றவற்றின் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, யு.பி.எஸ்.சி ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் நடத்துகிறது.