UPI இலவச காலம் முடிந்துவிட்டதா..? Google Pay, PhonePe, PayTM போன்றவற்றின் புதிய கட்டணப் பணப்பரிவர்த்தனை… ஷாக்கில் பயனர்கள்..!!!

3 days ago
ARTICLE AD BOX

இந்தியாவில் இலவச UPI பரிவர்த்தனையின் காலம் ஒவ்வொன்றாக முடிவிற்கு வருவதாக தெரிகிறது. குறிப்பாக, மின்சாரம், எரிவாயு போன்ற பில்களை செலுத்தும் போது இனிமேல் கட்டணம் விதிக்கப்படும் என Google Pay அறிவித்துள்ளது. இதற்காக, 0.5% முதல் 1% வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கனவே, ரீசார்ஜ் செய்வதற்காக Google Pay ரூ.3 வரை கட்டணம் வசூலிக்கிறது. தற்போது PhonePe, PayTM போன்ற பிற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளும் தங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் சில சேவைகளுக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ. 23.48 லட்சம் கோடி மதிப்பிலான UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதில் ரூ. 8.26 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் Google Pay வழியாகவே செய்யப்பட்டுள்ளன. இதனால், தங்களின் வருவாயை அதிகரிக்க Google Pay போன்ற நிறுவனங்கள் கட்டணப் போக்கை கொண்டு வர ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றம் மக்கள் மத்தியில் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மற்ற கட்டணமில்லா பரிவர்த்தனை முறைகளுக்கு மக்களின் மாறும் நோக்கம் எப்படி இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

Read Entire Article