Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...

3 hours ago
ARTICLE AD BOX

உலகம் முழுக்கவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் தற்போதைய பேசுபொருளாக உள்ளார். அந்த அளவிற்கு அரசியலில் அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது, பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு என அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்த நிலையில், அவரது அறியா வயது முதல் தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ள வரை உள்ளதுபோல், அவரது புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பின் பரிணாம வளர்ச்சி என பெயரிடப்பட்ட வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி பிறந்தவர். தற்போது 78 வயதாகும் அவர், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், 1949 தொடங்கி 2025-ல் அவர் அதிபராக பொறுப்பேற்கும் வரை, அதாவது அவரது 3 வயது முதல் 78 வயது வரையிலான புகைப்படங்களை ஏஐ மூலம் உருவாக்கி, அவரது பரிணாம வளர்ச்சியை காட்டியுள்ளனர். அவர் படிப்பு, தொழில், சாதனைகள், அரசியல் என அவரது வாழ்க்கையின் முக்கியமான வருடங்களை பட்டியலிட்டுள்ளது அந்த ஏஐ வீடியோ.

1949-ல் அவரது 3 வயது புகைப்படத்துடன் தொடங்கும் வீடியோ, 1964-ல் அவர் நியூயார்க் ராணுவ பள்ளி படித்தது, 1968-ல் வார்டன் வணிக பள்ளியில் படித்தது என பள்ளிப்பருவ புகைப்படங்களை காட்டுகிறது. பின்னர் அவரது தொழிலில் முக்கிய மைல்கற்களை காட்டும் வகையில், 1971-ல் ட்ரம்ப் அமைப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது, 1983-ல் நியூயார்க் நகரத்தில் ட்ரம்ப் டவரை திறந்தது, 1986-ல் The Art of the Deal புத்தகத்தை வெளியிட்டது வரை தொடர்கிறது.

இந்த ஏஐ வீடியோவில், ட்ரம்ப் தொலைக்காட்சிகளில் தோன்றிய நிகழ்வுகளும் காட்டப்பட்டுள்ளன. 2002-ல் Saturday Night Live என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியது, 2004-ல் The Apprentice தொலைக்காட்சி தொடரை தயாரித்து நடித்தது உள்ளிட்டவைகளும் காட்டப்பட்டுள்ளன. அதன் பிறகு ட்ரம்ப்பின் அரசியல் வாழ்க்கைக்கு மாறும் அந்த வீடியோ, 2016-ல் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பொறுப்பேற்றது மற்றும் 2025-ல் 47-வது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது வரை வந்து முடிகிறது அந்த வீடியோ.

The evolution of Donald J. Trump.. 🔥🔥 pic.twitter.com/oSAXGczIB1
— American AF 🇺🇸 (@iAnonPatriot) March 3, 2025

மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தொடர்பான இந்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: America Vs Canada: பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...

Read Entire Article