TRB Jobs; ஆசிரியர் தேர்வு வாரிய வேலை வாய்ப்பு; 132 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

6 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் (ASSOCIATE PROFESSOR) மற்றும் உதவிப் பேராசிரியர் (ASSISTANT PROFESSOR) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2025

ASSOCIATE PROFESSOR 

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

Advertisment
Advertisement

கல்வித் தகுதி: Master’s Degree in Law படித்திருக்க வேண்டும். National Eligibility Test (NET) or State Level Eligibility Test (SLET/SET) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 1,31,400 - 2,17,100

ASSISTANT PROFESSOR

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வித் தகுதி: Master’s Degree in Law படித்திருக்க வேண்டும். National Eligibility Test (NET) or State Level Eligibility Test (SLET/SET) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 68,900 - 2,05,500

ASSISTANT PROFESSOR (Pre – Law)

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: M.A. Degree படித்திருக்க வேண்டும். National Eligibility Test (NET) or State Level Eligibility Test (SLET/SET) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 57,700 - 1,82,400

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600, எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு ரூ.300

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Read Entire Article