Top Cinema News: நடிகையான கும்பமேளா அழகி.. ஆஸ்கர் ரேஸில் இந்திய படம்.. தளபதி 69 அப்டேட் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

5 hours ago
ARTICLE AD BOX

நடிகையான கும்பமேளா அழகி

மகா கும்பமேளா நிகழ்வில் ருத்ராட்சை மாலை விற்ற இளம் பெண்ணான மோனாலிசா தனது அழகான கண்களாலும், டஸ்கி அழகாலும் அனைவரையும் கொள்ளை கொண்டு இணையத்தில் வைரலானார். இதையடுத்து 16 வயதாகும் இவர் தற்போது நடிகையாகியுள்ளார். தி டைர் ஆஃப் மணிப்பூர் என்ற பாலிவுட் படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். வரும் ஏப்ரலில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஹவுஸ் ஓனர் மீது கஞ்சா கருப்பு புகார்

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வந்த நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், நான் ஊரில் இல்லாத சமயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து,வேறு நபருக்கு வாடகைக்கு விட ஹவுஸ் ஓனர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கஞ்சா கருப்பு புகார் தொடர்பாக மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தளபதி 69 பட டைட்டில் குறித்த அப்டேட்

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

சிறந்த நடிகருக்கான விருதை நிராகரித்த கிச்சா சுதீப்

கர்நாடகா மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதற்கு நடிகர் கிச்சா சுதீப் மறுத்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகளில் ‘பயில்வான்’ படத்துக்காக நடிகர் கிச்சா சுதீப்பு் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை பெற மறுத்திருப்பது குறித்து கிச்சா சுதீப் தனது எக்ஸ் பக்கத்தில், "எனக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை பெரும் மரியாதையாக கருதுகிறேன். என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக விருதுகள் எதையும் பெறக்கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருந்தேன். அதனை தொடர விரும்புகிறேன். நடிப்பிற்காக தங்களை அர்ப்பணித்த என்னைவிட இன்னும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். நான் இந்த விருதை பெறுவதை விட அவர்கள் பெற்றால் சிறப்பானதாக இருக்கும்.

இந்த கௌரவத்தை நிராகரிப்பதற்காக, எனது முடிவிற்காக நடுவர் குழு மற்றும் மாநில அரசிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் எனது முடிவை மதித்து எனக்கான விருப்பத்தை ஆதரிப்பீர்கள் என நினைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

உடல் உறுப்புகளை தானம் செய்த டி.இமான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் டி. இமான் தன் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நாம இறந்த பிறகும் இந்த உடல் பயனுள்ளதாக இருக்கும். ரெண்டு நாளைக்கு முன்னாடி, உடல் தானம் செய்திருந்தாலும், பிறந்த நாளன்றுதான் அறிவிக்க நினைத்தேன். அதன்படி இன்று அறிவித்திருக்கிறேன். என்னோட கண்கள், இதயம், நுரையீரல் என அனைத்து உறுப்புகளை தானம் செய்து முறைப்படி தானம் செய்ததற்கான டோனர் அட்டையையும் வாங்கிவிட்டேன்" என கூறியுள்ளார்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக சைஃப் அலிகான் வாக்குமூலம்

நானும் மனைவி கரீனா கபூரும் எங்கள் அறையில் இருந்தோம். அப்போது, எனது இளைய மகன் ஜஹாங்கிரை கவனித்து வரும் பணியாளரின் அலறல் சத்தம் கேட்டு தானும், மனைவி கரினாவும் அங்கு சென்றோம். அங்கே கையில் ஆயுதத்துடன் நின்றிருந்த கொள்ளையன், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார். கொள்ளையனை தடுக்க முயன்ற போது எனது முதுகு, கழுத்து பகுதியில் கொள்ளையன் கத்தியால் குத்தினார். காயம் ஏற்பட்ட நிலையிலும் கொள்ளையனை அறைக்குள் தள்ளி அறையை பூட்டினேன்.

பின்னர் அந்த அறையை திறந்து பார்த்த போது உள்ளே யாரும் இல்லை என தெரிவித்தார். அங்கிருந்து கொள்ளையன் எப்படி தப்பி சென்றார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, மகனின் அறையில் புகுந்த அந்த நபர் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக எனது பணியாளர் தெரிவித்தார். இந்த மோதலில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறினார். இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த ஷாரிஃபுல் இஸ்லாம் காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜனவரி 29ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஸ்கர் ரேஸில் இந்திய படம்

97வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த லைவ் ஆக்‌ஷன் ஷார்ட் பிலிம் பிரிவில் இந்தியாவில் தயாரான அனுஜா என்ற குறும்படம் இடம்பிடித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருது வென்ற தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் படத்தை தயாரித்த குனீத் மோங்க தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். இந்திய நடிகையான பிரியங்கா சோப்ராவும் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார்.

சிவகார்த்திகேயன் பட தலைப்புக்கு எதிர்ப்பு

அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து இந்த படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் தலைப்புக்கு நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது, இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்த் திரையுலகுக்கு இப்போது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை? கதைப் பஞ்சம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துள்ள பல பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைக்கிறார்கள். இப்போது, படத் தலைப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா?

ஏற்கனவே பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்ற போது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, மீண்டும் பராசக்தி என்ற பெயரில் அந்த திரைப்படம் வெளியானது. பராசக்தி என்ற பெயரை மற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்கள்.

15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் நயன்தாரா

மலையாள நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்ஸிக் என்ற படத்தில் கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை படத்தில் வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் ஓபராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 2010இல் வெளியான சூப்பர் படத்துக்கு பின் 15 ஆண்டுகள் கழித்து நடிகை நயன்தாரா மீண்டும் கன்னட படத்தில் நடிக்கிறார்.

துணை நடிகர் ஜெயசீலன் மரணம்

தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்பட ஏராளமான படங்களில் அடியாள் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஜெயசீலன். மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article