ARTICLE AD BOX
கிளையை நிர்வாக ஆடிட்டர் திரு. ராஜகோபாலன் அவர்கள் திறந்து வைத்தார். நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குநர்கள் திரு. Ba. ரமேஷ், திரு. NB.குமார், நிர்வாக நிதி அதிகாரி திரு. ராஜேஷ் கண்ணா, பொது மேலாளர்கள் திரு. அருண், திரு. கோகுல், திரு. கிஷோர் லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை தி.நகரில் தங்கமயிலின் 60வது புதிய கிளை பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இன்று 30 இலட்சம் வாடிக்கையாளர்களுடன், தமிழகம் முழுவதும் 59 கிளைகளை கொண்ட ஒரு பிரபலமான ஜுவல்லரியாக திகழ்கிறது. தங்கமயில் நிறுவனத்தின் 60வது புதிய கிளை சென்னை தி.நகரில் நேற்று முதல் துவங்கியது. தங்கமயில் ஜுவல்லரி மிகச் சிறந்த நகைகளையும், மிகக் குறைந்த சேதாரத்திலும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழாவின் சிறப்பம்சம்:
தங்கமயில் ஜுவல்லரி தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'தங்க மாங்கல்யம்' என்ற தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், இரத்தினக் கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என மிகப்பெரிய திருமண நகை கலெக்ஷன் மற்றும் டிசைன்கள் கைக்கொடுக்கின்றன.
இந்தியாவில் மிகச்சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கும் வாய்ப்பு. இதுவரை இல்லாத அளவில் எண்ணிலடங்கா திருமண நகை கலெக்ஷன்கள், பிரைடல் செட் மற்றும் பிரம்மாண்டமான தங்க மாங்கல்யம் கலெக்ஷன்களை தங்கமயில் ஜுவல்லரி வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"தரமான சேவையுடன் நியாயமான விலையில் நகைகளை வழங்குவதே எங்கள் இலக்கு. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பான திட்டமிடல், வழிகாட்டுதல்கள், மற்றும் வசதிகளை உருவாக்கியுள்ளோம். தற்போது சென்னை தி.நகரில் இந்த பயணத்தை தொடங்கியுள்ளோம். சென்னை மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அதிநவீன வசதிகளுடன் இந்த ஷோரூமை வடிவமைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் அதிக ஆதரவு வழங்குவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - தங்கமயில் ஜுவல்லரி நிர்வாகிகள்.