ARTICLE AD BOX
மார்ச் 22, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் கார்த்திக் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கோபுர வாசலிலே, சத்யராஜ் - கவுண்டமணி காமெடியில் கலக்கிய புதுமனிதன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. முந்தையை ஆண்டுகளில் மார்ச் 22ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு
கோபுர வாசலிலே
மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கோகுல கிருஷ்ணா வசனம் எழுத, கார்த்திக், பானுப்பிரியா பிராதான கதாபாத்திரத்தில் நடித்து 1991இல் வெளியான ரெமாண்டிக் காமெடி படம் கோபுர வாசலிலே. படத்தில் இன்னொரு நாயகியாக சுசித்ரா நடித்திருப்பார். நாசர், சார்லி, ஜூனியர் பாலையா, நாகேஷ், வி.கே. ராமசாமி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் டார்க் ஹுயூமர் நிறைந்து ட்ராமா ஐயர்னி பாணி கதையாக படம் அமைந்திருக்கும்.
படத்தின் கதாபாத்திரம் தான் ஏமாற்றப்படுவது தெரியாமலும், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தெரியும் விதமாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதையில், நவரச நாயகன் என்ற அடைமொழிக்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். காதல், ஏமாற்றம், பிரிவு, கோபம், வெகுளித்தனம், குறும்பு என அனைத்து கலந்த எமோஷன்களில் நடிப்பு ராஜ்ஜியம் செய்திருப்பார். பானுப்பிரியாவும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப எதார்த்த நடிப்பை தந்திருப்பார். நாசர் கொஞ்சம் வில்லத்தனத்துடன் சீரியஸ், காமெடி என கலக்கியிருப்பார். நாகேஷ், வி.கே. ராமசாமி ஆகியோரும் தங்களது பாணியில் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
படத்தின் மற்றொரு ஹீரோவாக இளையராஜாவின் இசையும், பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் அமைந்திருந்தது. டை்டிலில் தொட்ங்கும் பிஜிஎம்மும்ஸ, அதற்கு ஏற்ப மலைப்பிரதேசமான ஊட்டியின் எழில் கொஞ்சும் அழகை காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியமைப்பும் கவிதையாக இருந்தன. படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் அற்புத மெலடிகளாக உள்ளன.
மலையாள படமான பாவம் ராஜகுமாரன், இந்தி படமான சஷ்மே புத்தூர் ஆகிய படங்களின் கதையை வைத்து புதிதாக திரைக்கதை உருவாக்கி வெற்றியும் கண்டார் ப்ரியதர்ஷன். தமிழில் இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாக இருந்து கோபுர வாசலிலே, மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய தமிழ் படங்களில் ஒன்றாக உள்ளது.
புதுமனிதன்
வாழ்க்கை சக்கரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் சத்யராஜ் - கவுண்டமணி - மணிவண்ணன் காம்போவில் உருவான கமர்ஷியல் படம் புதுமனிதன். 1991இல் வெளியான இந்த படத்தில் பானுப்பிரியா, சரத்குமார், மனோரமா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். குப்பத்து ரவுடிக்கும், பின்னணி கோரஸ் பாடகி மீது ஏற்படும் காதல். இறுதியில் இந்த காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட் போன்ற அனைத்து ஜனரஞ்சர அம்சங்களை வைத்தும் படத்தை அமைந்திருக்கும்.
மணிவண்ணன் ஸ்டைல் நய்யாண்டி காட்சிகள், சத்யராஜ் - கவுண்டமணி காம்போ காமெடி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வில்லனாக சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தேவா இசையில் அங்கம் ஒரு தங்கம், ஏலெலங்குயிலே ஆகிய பாடல்கள் ஹிட்டாகி பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடலாக உள்ளது.
படத்தில் சத்யராஜ் கேரக்டரின் பெயர் கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி படத்துக்கு முன் சத்யராஜ் நடித்த இந்த கபாலி கேரக்டரில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது. படம் சூப்பர் ஹிட் ஆனதுடன், சத்யராஜ் - கவுண்டமணி கூட்டணி காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படமாக உள்ளது.
மேலும் படிக்க: நடிகர்களுக்கு மேடையில் வைத்து முத்தம் கொடுத்த ஸ்வாதி ரெட்டி
வசந்த வாசல்
எம்.ஆர். இயக்கத்தில் விஜய், ஸ்வாதி, மன்சூர் அலிகான், வடிவேலு, கோவை சரளா உள்பட பலர் நடித்து 1996இல் வெளியான காதல் கலந்த ஆக்சன் திரைப்படம் வசந்த வாசல். விஜய் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் ஆனது. சொந்த தயாரிப்பு படங்களில் நடித்து வந்த விஜய், வேறு பேனருக்கு நடித்து சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் நல்ல வசூலை பெற்றது.

டாபிக்ஸ்