ARTICLE AD BOX
Suriya: சூர்யாவுக்கு 5 இன்ச்.. பூஜா ஹெக்டேவுக்கு ஒரு இன்ச்.. விஜய் ரசிகரின் மோசமான போஸ்ட்..
சென்னை: சூர்யா, பூஜா ஹெக்டே. நாசர், கருணாகரன், ஜோஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படம் வரும் மே மாதம் முதல் தேதியில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படக்குழு நேற்று அதாவது மார்ச் 22ஆம் தேதி படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியிட்டார்கள்.பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சூர்யா குறித்து மோசமாக கமெண்ட் அடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் சரியாக போகவில்லை. படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வி படமாக மாறியது. இதனால் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. படத்தின் திரைக்கதை தொடங்கி, காட்சிகள், பின்னணி இசை என அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தேசிய விருது வாங்கிய சூர்யா போன்ற நடிகர், தனது படத்தில் இடம் பெற்றுள்ள பாடலில் கதாநாயகியை எப்படி நீச்சல் உடையுடன் நடக்கும்படியான காட்சிக்கு அனுமதி அளித்தார் என்றெல்லாம் கேள்விகள் பறந்தன. சூர்யாவுக்கு ஆதரவாக, அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா சப்போர்ட்டுக்கு வந்தார். ஆனால் ஜோதிகாவுக்கும் பதிலடிகள் கொடுக்கப்பட்டதால், அமைதியாகிவிட்டார். தற்போது சூர்யா ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் படமாக இருப்பது ரெட்ரோ படம் தான்.

சூர்யா: ரெட்ரோ படத்தின் சார்பாக ஏற்கனவே டீசர், கண்ணாடிப் பூவே என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் சூர்யாவின் லுக் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. படம் பயங்கரமான காதல் கதை என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் டீசரைப் பார்க்கும்போது ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கண்ணாடி பூவே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று வெளியான கனிமா பாடல் ஆட்டம் போட வைக்கும் பாடலாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கனிமா பாடல்: சூர்யா ரசிகர்கள் தொடங்கி, சந்தோஷ் நாராயணன் ரசிகர்கள் வரை பாடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பாடலும் அந்த அளவிற்கு அட்டகாசமாக உள்ளது. மேலும் பாடல் 12 மணி நேரத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வியூவ்ஸ்களை கடந்துள்ளது. பாடலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜய் ரசிகர் ஒருவர், சூர்யாவின் உயரம் குறித்து கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உருவக்கேலி: அதாவது, பாடலில் சூர்யாவின் காஸ்ட்யூமில், சூர்யாவுக்கு அதிக பாட்டம் (Bottom) கொண்ட ஷூ கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மெல்லிதான பாட்டம் கொண்ட செப்பல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், தனது எக்ஸ் பக்கத்தில், " சூரியா அவர்களின் காலனி உயரம் 5 இன்ச் இருக்கு , பூஜா அவர்களின் காலனி உயரம் 1 இன்ச் இருக்கு ....எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு" என பதிவிட்டு சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் கார்த்திக் சுப்புராஜை டேக் செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர் உருவ கேலி செய்யக்கூடாது என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல் சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்ட்க்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.
