Sunita Williams: "துணிச்சலால் உருவானவர் சுனிதா வில்லியம்ஸ்" - நினைவுகளைப் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா

4 hours ago
ARTICLE AD BOX

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா இன்று, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மிகப்பெரிய நிம்மதி எனத் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து சுனிதா வில்லியம்ஸின் தைரியத்தைப் பாராட்டியுள்ளார்.

Anand Mahindra ட்வீட்

"அவரையும் அவரது சக பணியாளரையும் பார்ப்பது மிகப்பெரிய நிம்மிதி, சில மணிநேரங்களுக்கு முன்பு பூமியின் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளனர். அவர் துணிச்சலால் உருவானவர். அவர் மீண்டும் நம் இடையே இருப்பது நல்லது. ஸ்வகதம், சுனிதா" என எழுதியுள்ளார்.

(ஸ்வகதம் என்பது சமஸ்கிருத மொழியில் வரவேற்பு வாழ்த்து)

Crew

2023ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ், முகேஷ் அம்பானி மற்றும் விரிந்தா கபூர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வாஷிங்டனில் நடந்த இந்தியா- அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப நிகழ்வில் எடுக்கப்பட்டது.

"ஸ்பேஸ் எக்ஸ் மீட்புப் பணி தொடங்கப்பட்டபோது, ​​கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் சுனிதா வில்லியம்ஸ் உடனான இந்த தற்செயலான சந்திப்பை நான் நினைவு கூர்ந்தேன்" என்று மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

When the SpaceX recue mission was launched, I recalled this chance encounter almost two years ago with @Astro_Suni in Washington.

It was an enormous relief to see her and her colleagues’ successful splashdown back on earth a few hours ago.

She is courage personified and… https://t.co/E64p9YX5t3

— anand mahindra (@anandmahindra) March 19, 2025

பூமிக்குத் திரும்பிய Sunita Williams

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகுப் பூமிக்குத் திரும்பியுள்ளனர். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் காப்ஸூல் மூலம் மெக்ஸிகோ வளைகுடாவில் பாராசூட் மூலம் தரையிறங்கினர் (இந்திய நேரப்படி புதன் கிழமை காலையில்).

ஒருவார பயணத் திட்டத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62) துரதிர்ஷ்டவசமாக 286 நாட்கள் விண்வெளியில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த விண்வெளி பயணத்தில் பூமியை 4,576 முறை சுற்றி வந்துள்ளனர். கிட்டத்தட்ட 19.5 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளனர்.

NASA: சுனிதா வில்லியம்ஸின் மிஷனும் நாசாவின் 60 ஆண்டுகால ஆராய்ச்சியும் - விரிவான அலசல்! | Explained

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article