STR 49 Update: சந்தானத்தை கேட்ட இயக்குநர்; சிலம்பரசன் விதித்த நிபந்தனை; கதாநாயகி யார்?

9 hours ago
ARTICLE AD BOX

சிலம்பரசனின் 'STR 49 ' படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த படத்தில் சிம்புவுடன் இன்னொரு ஹீரோவும் இணைகிறார். கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால், படத்திற்கான லொகேஷன் தேடுதல்கள் ஒரு புறம் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. இதற்கிடையே கமலுடன் நடித்திருக்கும் 'தக் லைஃப்' படத்திற்கான புரொமோஷன்களும் ஆரம்பிக்கின்றன.

Ponman Review: 'கல்யாண வீட்டில் திக்... திக்... திக்...' - பேசில் ஜோசப்பின் 'பொன்மேன்' மின்னுகிறதா?
ராம்குமார் பாலகிருஷ்ணன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் கமலுடன் நடித்திருக்கும் 'தக் லைஃப்' வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. சிம்புவின் 48வது படமாக இருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் மே மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு அடுத்த படமான 'STR 49' படத்தை 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக இருந்தது. கல்லூரியிண் பின்னணியில் இன்றைய தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாகவும், முழுக்க முழுக்க சிம்புவின் ரசிகர்களுக்கான படமாகவும் உருவாகிறது.

மிருணாள் தாக்கூர்
Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ

இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார், சிம்புவிடம் கதை சொல்லும்போதே, 'உங்களுடன் சந்தானமும் இணைந்து நடித்தால் சூப்பராக இருக்கும்' என்று சொல்லியிருக்கிறார். ஆச்சரியமான சிம்பு, உடனே சொன்ன பதில் என்ன தெரியுமா? 'சந்தானம் இப்போ ஹீரோவாக கலக்குறார். அவரை என்னுடன் நடிக்கக் கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பார். அதே சமயம், என் படம் அவருக்கு பலம் சேர்க்கிற மாதிரியான கதாபாத்திரமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நானே அவரைக் கூப்பிடுறேன்.

அவரது கரியரிலும் 'STR 49' பேசப்படக்கூடிய படமாக அமையுமாறு இருக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தான் சந்தானத்தை அழைத்ததாக தகவல். அதேபோல், சிம்பு நடிக்கக் கேட்டதும், உடனே க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் சந்தானம் என்ற தகவலும் வருகிறது. படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம், அவரது ஹீரோ இமேஜை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிறார்கள்.

கயாடு லோஹர்

சிம்புவின் ஜோடியாக இதுவரை நடித்திராத காம்போவாக திட்டமிட்டு வருகின்றனர். இன்றைய டிரெண்டிங் ஹீரோயினான கயாடு லோஹர், மிருணாள் தாக்கூர் என சிலரை பரிசீலனை செய்து வருகின்றனர். மற்றபடி, நடிகர்கள், தொழில் நுட்ப டீமின் தேர்வு இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படம் கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை என்பதாலும், கல்லூரி ஒன்றிலேயே பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்கு முன் வெளியான சில ஹீரோக்களின் கல்லூரி சப்ஜெக்ட் படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் படமாக்கப்பட்டிருக்கும்.

கமலுடன் சிம்பு

அப்படி பார்த்து பார்த்து சலித்து போன கல்லூரிகளில் இல்லாமல், ஃப்ரெஷ்ஷான ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றும், இதற்காக ஹைதராபாத், கேரளா என பல இடங்களுக்கு கல்லூரி லொக்கேஷ்ன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article