ARTICLE AD BOX
Published : 05 Mar 2025 08:22 PM
Last Updated : 05 Mar 2025 08:22 PM
Sleep Divorce: திருமணம் ஆகியும் தனித்து உறங்கும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆய்வுத் தகவல்

சென்னை: குறட்டை, மன அழுத்தம் மற்றும் மாறுபடும் பணி நேரம் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 70 சதவீத இந்திய தம்பதிகள் தனித்து உறங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது ஓய்வினை ஆரோக்கியமானதாக மாற்றும் வகையில் இந்தப் போக்கை தம்பதிகள் கடைபிடிப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் இன்றைய தம்பதியரை ஆட்டிப்படைக்கிறது விவாகரத்து. காதலித்து வாழ்வில் இணைந்தவர்களும் விவாகரத்து பெற வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இத்தகைய நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்மெட் என்று நிறுவனம் உறக்கம் சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தம்பதிகள் தனித்து உறங்குவது தெரியவந்துள்ளது.
இதில் இந்தியாவை சேர்ந்த தம்பதியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். அந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவில் சுமார் 78 சதவீத இந்திய தம்பதியர்கள் நல்ல மற்றும் ஆழ்ந்த உறக்கத்துக்காக தங்களது இணையரை தவிர்த்து, தனித்து உறங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனா 68 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா 65 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த தம்பதியர்கள் 50 சதவீதம் தங்களது இணையருடன் தனித்தும், சேர்ந்தும் உறங்குகின்றனர்.
குறட்டை, சத்தமாக மூச்சு விடுதல், வேலை நேரம் மாறுபடுவது, படுக்கையில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது இதற்கான காரணங்களாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். வயது அதிகம் உடைய தம்பதியர்கள் அதிகம் பேர் தனித்து தூங்குவதாக கூறியுள்ளனர். இதனால் தங்களது ஆரோக்கியம் மேம்படுவதாகவும், ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள முடிவதாகவும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் தம்பதியர்கள் ஒன்றாக இணைந்து தூங்குவதும் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறைவதாக ஆய்வில் பங்கேற்ற தம்பதியர்கள் கூறியுள்ளனர். மகிழ்ச்சி, அமைதி போன்றவை ஏற்படுவதாக ஒன்றாக தூங்கும் தம்பதியர்கள் கூறியுள்ளனர். மேலும், மாறி வரும் உலக சூழல் காரணமாக பெரும்பாலானோர் தூக்கமின்றி தவிப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம், பதற்றம், நிதி சார்ந்த நெருக்கடி, மனநலன் மற்றும் உறவு சிக்கல் போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தமிழகத்தில் கோடையில் தினசரி மின் தேவை 22,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு
- ‘பாடகி கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை’ - தூக்க மாத்திரை ஓவர் டோஸ் ஆனதாக மகள் விளக்கம்
- குமரி மாவட்ட கல்வி அதிகாரிகள் இருவருக்கு ஒரு வாரம் சிறை - ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க மறுத்ததால் ஐகோர்ட் அதிரடி
- ‘அஸ்திரம்’ வெளியீடு தள்ளிவைப்பு - காரணம் என்ன?