Cow (Photo Credit: Pixabay)

மார்ச் 05, சென்னை (Chennai News): மாடுகளுக்கு வைக்கோலில் இருப்பதை விட இந்த ஊறுகாய்ப் புல் சிறந்ததாகவும், கால்நடைகளிலிருந்தும் அதிக லாபம் கிடைப்பதாகவும் தன்னிடமிருந்து சைலேஜ் என்னும் ஊறுகாய்ப்புல் வாங்கும் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் தெரிவிக்கிறார்கள், கால்நடைகளுக்கு சைஜேல் ஒரு நல்ல பசுந்தீவனமாக இருக்கும் என தெரிவிக்கிறார் தேனியைச் சேர்ந்த அண்ணாமலை சைலேஜ் ஃபீட் உரிமையாளர் ராஜ் குமார்.

இந்த சைலேஜ் என்பது, 70 நாளான சோளப்பயிரை முழு செடியாகவே வெட்டி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை அப்படியே பதப்படுத்துவதே ஊறுகாய்ப்புல் என்னும் சைலேஜ் ஆகும். இந்த வெட்டி வைக்கப்பட்டதை 2 முதல் 3 ஆண்டுகள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதில் நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

கால்நடைகளுக்கு இதை பிற உணவுகளுடன் கலந்து 5 கிலோ இந்த சைலேஜைக் கொடுக்கலாம் அல்லது 20 கிலோவை சரிப்பாதியாக பிரித்து மூன்று வேளையும் இதை மட்டுமே உணவாகவும் கொடுக்கலாம். இந்த ஊறுகாய்ப் புல்லில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால், கறவை மாடுகள் அதிக பால் கறக்கும் மற்றும் எடை அதிகரித்து, நோய் எதிர்ப்பு திறனையும் வலுப்படுத்தும். ஆடு மற்றும் கோழிகளுக்கு எடை அதிகரித்து வளர்ச்சியை துரிதப்படுத்தும் என சைலேஜ் பற்றி எடுத்துரைக்கிறார் ராஜ் குமார். Women Gym Wear: கவனிக்க வேண்டிய ஜிம் ஆடைகள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

சைலேஜ் பசுந்தீவனம்:

ஆரம்பத்தில் சொந்தமாக வளர்த்து வந்த மாடுகளுக்கு தீவன செலவும் அதிகம் இருந்ததால் அதை குறைப்பதற்கான மாற்று வழி தேடலின் போதே இந்த சைலேஜைப் பற்றி தெரிய வந்தது. பின் குறைவான அளவில் சொந்த தேவைக்காக மட்டுமே இதை தயார் செய்து பயன்படுத்தி வந்தோம். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி கால்நடைகளுக்கு கொடுத்தனர். தொடக்கத்தில் சொந்த இடத்திலேயே தேவையான அளவு மக்கா சோளம் பயிரிட்டு பயன்படுத்தி வந்தோம். கடந்த ஒரு வருடமாகவே இதை வியாபார நோக்கில் செய்து வருவதால் அதிக தேவை காரணமாக பிற சோள விவசாயிகளிடம் இருந்து வாங்கி இதை தயாரித்து வருகிறோம் என்கிறார் ராஜ்குமார்.

சொந்தமாக கால்நடை பண்ணைகள் வைத்திருப்பவர்கள் இந்த சைலேஜைத் தயாரித்து சேமித்துக் கொள்ளலாம். கோடைகாலத்தில் பச்சை தீவனங்கள் கிடைக்காதபோது இதைப் பயன்படுத்தலாம். 140 நாட்கள் ஆனால் சோளக்கதிரினை அறுவடை செய்வர். ஆனால் இதை கால்நடைகளுக்கான சைலேஜாக மாற்ற 70 நாட்களான பயிரை செடியுடன் சேர்த்து வெட்ட வேண்டும்.

அதை பிளாஸ்டிக் தொட்டிகளில் அதிகம் காற்று இல்லாதவாறு அழுத்தப்பட்டு சேமித்து மூடி வைத்துக் கொள்ளலாம். 10 நாட்களுக்கு பிறகு தீவனமாக பய்னப்டுத்த ஆரம்பிக்கலாம். இது 2 வருடத்திற்கு மேலும் அப்படியே வந்திருந்து பயன்படுத்தலாம். காற்று புகாதவரை அவைகள் அப்படி இருக்கும். நாட்கள் அதிகரிக்க அதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அதிகரிக்கவே செய்யும். அதிகளவில் சைலேஜை சேமிக்க விரும்புவர்கள், மண்ணில் குழி தோண்டி தார்பாய் இட்டு அதில் அதிக அழுத்தம் கொடுத்து சேமிக்கலாம்.

இதற்கு சாப் கட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளலாம். வீட்டு மற்றும் பண்ணை தேவைக்கு இந்த இயந்திரங்களை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வியாபார நோக்கில் செய்ய நினைப்பவர்கள் இதற்காகவே பிரத்தியேகமாக இருக்கும் இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது துண்டுகளாக நறுக்குவதுடன் இவைகளை நன்கு அழுத்தி (கம்பிரஸ்) 50 கிலோ எடையுள்ள உருளைகளாக மாற்றி பேல்களாக ரோல் செய்து கொள்ளும் வகையில் இருக்கும். செமி ஆட்டோமேட்டிக் இயந்திரமான இது 13 லட்சம் ரூபாய் வரை இருக்கும். நறுக்க மட்டும் பயன்படுத்தும் இயந்திரம் 2 லட்சம் ரூபாயில் கிடைக்கும் என தெரிவிக்கிறார் ராஜ் குமார்.

இந்த சைலேஜை கிலோ ரூ. 6 வீதம் 50 கிலோவை 300 ரூபாய்க்கு விற்று வருகிறேன். இந்த விலை அந்தந்த பகுதிகளைப் பொருத்து மாற்றுபடும்.