Sivakumar: ``ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வரக் காரணம் பெரியார்தான்" - நடிகர் சிவகுமார்

2 hours ago
ARTICLE AD BOX
நடிகர் சிவகுமார் இன்று (பிப் 25) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

சிவகுமார் நடிகர் என்பதையெல்லாம் தாண்டி ஓவியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். தன் வாழ்நாளில் நிறைய ஓவியங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், 2007ம் ஆண்டு தான் வரைந்த பெரியார் ஓவியத்தை மாணவ/ மாணவிகளுக்குத் திரையிட்டுக் காண்பித்து பெரியார் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சிவகுமார் வரைந்த தந்தை பெரியார் ஓவியம்

தந்தை பெரியார் குறித்துப் பேசியிருக்கும் சிவகுமார், "ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்குக் காரணம் பெரியார்தான். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக மக்களைப் பிரிச்சு, கீழ் சாதி என மக்களை அவமானப்படுத்தி, முன்னேறவிடாமல் வைத்திருந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய போராளி பெரியார். 2007-ம் ஆண்டு பிரமாதமாக நான் வரைந்த கடைசி ஓவியம் இதுதான். இதற்குப் பிறகு நான் பெரியதாக எதுவும் வரையவில்லை" என்று பெரியார் குறித்து பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.

Sivakarthikeyan:``சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனா, எனக்கு..'' - ஷாம்
Read Entire Article