ARTICLE AD BOX

இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், “நான் விளையாடிய இன்னிங்ஸ்களில் மிகவும் திருப்திகரமான இன்னிங்ஸ் இது. ஐசிசி தொடரில் நான் அடித்த முதல் சதம் இது தான். நானும் ரோகித் பாயும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்தை எதிர்கொள்ள சிறிது சிரமப்பட்டோம். நான் வேகபந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கொஞ்சம் இறங்கி வந்து விளையாட வேண்டி இருந்தது. காரணம் ஸ்டெம்ப்க்கு வெளியே செல்லும் பந்தை அடித்து ஆட முடியவில்லை. ஆடுகளம் தளர்வாக இருந்ததால் பேட்டிற்கு பந்து வரவில்லை.
வங்கதேசத்தின் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போதும் பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. பிரன்ட் ஃபூட்டை எடுத்து விளையாட முடியவில்லை. இதனால் பேக் ஃபூட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்தினோம். நானும் கோலியும் ஸ்ட்ரைகில் இருக்கும் பொழுது சிங்கிள்ஸ் எடுப்பதற்கே கடினமாக இருந்தது. ஒரு சமயத்தில் எப்படியாவது எதிர்த்து ஆடியே ஆக வேண்டும் என்று கடும் நெருக்கடி இருந்தது. அப்போதுதான் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது.

ஏதேனும் ஒரு வீரர் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து சொல்லி அனுப்பினார்கள். நாங்கள் அதன்படியே செயல்பட ஆரம்பித்தோம். என்னுடைய முதல் சிக்ஸர் எனக்கு தன்னம்பிக்கையை வரவழைத்தது. இரண்டாவது சிக்சர் என்னை சதத்திற்கு அருகில் கொண்டு சென்றது. இரண்டு சிக்ஸர்களுமே எனக்கு திருப்திகரமாக அமைந்தது." என்று கூறினார்.