Shubman Gill: ஆட்டத்தின் வேகம் மாறியுள்ளது.. ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் கூட அடிக்கலாம் - சுப்மன் கில்

10 hours ago
ARTICLE AD BOX

இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக கடந்த சீசனில் பொறுப்பு வகித்த சுப்மன் கில், இந்த சீசனிலும் தொடர்கிறார். இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெறுகிறது.

இதையடுத்து ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஸ்டார்ஸ் ஆன் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் சுப்மன் கில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசும் போது, தனது தொடக்க கால ஐபிஎல் நினைவுகள், ஐபிஎல் 2025 தொடர் மீதான எதிர்பார்ப்பு, கேப்டன்சி உள்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

சச்சின் டெண்டுல்கர் மீது கொண்டிருந்த அவரது பக்தியைப் பற்றி சுப்மன் கில் கூறும்போது, "நான் என் அப்பாவுடன் பஞ்ச்குலாவில் உள்ள தாவு தேவி லால் ஸ்டேடியத்தில் மூன்று அல்லது நான்கு ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்துள்ளேன். ஐபிஎல் தொடங்கி இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அங்கு பயிற்சிக்காக வந்தது.

சச்சினுக்கு பந்து வீசியது தான் முதல் ஐபிஎல் அனுபவம்

எனக்கு அப்போது பத்து வயது. அப்போது சச்சின் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. பயிற்சியின்போது அவர்களுக்கு நான் பந்து வீசினேன். இது என் முதலாவது ஐபிஎல் நினைவுகளில் ஒன்று. அப்போது மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் ஏற்கனவே சச்சினை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அவர் தான் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்க காரணமாக இருந்தார். என் அப்பா அவரின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் கிராமத்தில் சச்சினுக்காக நிறைய போஸ்டர்கள் வைத்துள்ளார்

கேப்டன்கள் வீரர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்

நேர்த்தியான தலைமையே ஒரு தொடர்ச்சியான பயணம். ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு வாரத்திலும் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு வீரரும் தனித்தன்மையுடன் வருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் பல விஷயங்களை நன்கு புரிந்து கொள்ளலாம். ஒரு தலைவராக, ஒவ்வொரு வீரரின் திறமையை அதிகபட்சமாக பயன்படுத்துவது முக்கியம். அவர்களின் பலவீனங்கள், பலம், எப்படி மோசமான நிலைமையில் இருந்தால் திரும்பி வர முடியும் என்பதெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாடும் அனுபவம் அதிகரிக்கும்போது, வெற்றி மற்றும் தோல்வி ஆகியவை தலைமைத்துவத்தைக் கட்டமைக்க உதவுகின்றன. ஆரம்பத்தில், நான் தனி ஆளாக இருந்தேன். ஆனால் தலைமையேற்க பிறகு, சக வீரர்களுடன் உரையாட வேண்டும் என்பதில் அவசியம் ஏற்பட்டது. அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமெனில், கேப்டன் நேரடியாக அணுகுவது முக்கியமானது.

கேப்டன்சி, பேட்டிங்கை பிரிந்து அணுகுவது முக்கியம்

பேட்டிங்கின் போது, நான் கேப்டன் என்ற நிலையை மறந்து, விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என இரண்டையும் ஒரே நேரத்தில் கவனித்தால், விளையாட்டில் பாதிப்பு ஏற்படும். பேட்டிங் என்பது ஒரு தனிப்பட்ட போராட்டம். ஆனால் கேப்டனாக இருப்பது மைதானத்தில் ஒரு குழுவின் உழைப்பாக மாறுகிறது. கடந்த ஆண்டில், சில சமயங்களில் அதிகமாக யோசித்ததால், எனது விளையாட்டு பாதிக்கப்பட்டது. எனவே, கேப்டனாக இருப்பதை பேட்டிங்கில் இருந்து பிரித்து வைத்து அணுகுவது என் முக்கியமான பாடமாக உள்ளது

குஜராத் டைட்டன்ஸ் பலம்

நாங்கள் வலுவான பந்துவீச்சு அணியாக இருக்கிறோம். ரஷித் எங்களுடன் உள்ளார். மேலும் ருதர்ஃபோர்ட், பிலிப்ஸ், பட்லர் போன்ற அதிரடியான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். மஹிபால் மற்றும் சாய் போன்ற இந்திய வீரர்கள் எங்கள் அணியில் ஆழத்தை கூட்டுகின்றனர்.

ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில், அணியின் சமநிலையை பாதுகாக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் கவலைப்பட தேவையில்லை. சரியான அணுகுமுறை மற்றும் விவேகமான முடிவுகள் கொண்டால், காலிறுதிக்கு முன்னேற முடியும். இறுதிப் போட்டியில் வெற்றி பெற, தாக்குதல் மிக்க அணுகுமுறையும் நேர்மறை எண்ணக்கோளும் அவசியம். அனைத்து ஐபிஎல் காலிறுதிகளிலும், உண்மையான நெடுநாள் திட்டத்தை செயல்படுத்திய அணிகள் வெற்றிப் பெறுவது பார்த்திருக்கிறேன்

இனி 300 ரன்கள் கூட அடிக்கலாம்

ஐபில் போட்டிகளில் ஆட்டத்தின் வேகம் முன்பை விட மாறியுள்ளது. விளையாட்டின் வேகம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது, இனி ஒரு போட்டியில் 300 ரன்கள் அடிக்க முடியும் போலவே தெரிகிறது. கடந்த வருடம் சில சமயங்களில் நாம் அதற்கருகில் சென்றிருந்தோம். Impact Player விதி இந்த தொடரை இன்னும் பரபரப்பாக மாற்றுகிறது. ஐபிஎலின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு நட்சத்திரம் உருவாகிறார்கள். எதிலும் எதிர்பார்க்கப்படாத வீரர்கள், மாபெரும் ஆட்டக்காரர்களாக மாறுவதை காண முடிகிறது.

தொடரின் கட்டமைப்பு, தொடர்ந்து போட்டிகள், பயணங்கள் ஆகியவை வீரர்களை உற்சாகத்தில் வைத்திருக்கின்றன. ஒருமுறை வெற்றிப் பெறத் தொடங்கினால், அந்த momentumஐ ஐந்து போட்டிகள் வரை வைத்திருக்கலாம். ஆனால், முக்கியமான வீரர்கள் காயமடைந்தால், சரியான மாற்று வீரரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இந்த சவால்களுடன், ஐபிஎல் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டியாக இருக்கிறது, மேலும் ஒவ்வொரு சீசனும் புதிய அனுபவங்களை ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறது" என்றார்.

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்தது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், href= https://tamil.hindustantimes.com/topic/cricket>கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
Read Entire Article