Sengottai Madurai Train: செங்கோட்டை - மதுரை ரயில் சேவை.. போடி வரையில் நீட்டிக்கப்படுமா..?

4 days ago
ARTICLE AD BOX

1928-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கேரளாவில் விளைந்த ஏலக்காய் போன்ற நறுமண பொருட்களை வியாபார தேவைக்காக தமிழகம் கொண்டுவர போடி - மதுரை இடையிலான ரயில் போக்குவரத்தை மீட்டர் கேஜ் பாதையில் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இயங்கி வந்த சேவை கடந்த 2010 ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. போடி, தேனி, ஆண்டிபட்டி, மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி வழியாக இயங்கி வந்ததால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு இந்த அகலப்படுத்தும் பணிக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் விரைவு படுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையும், 2ம் கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை 17 கிலோ மீட்டர் தூரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மற்றும் தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை  பிரதமர்  நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த நிலையில் தற்போது செங்கோட்டையிலிருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு செல்லும் ரயிலை தேனி மாவட்டம் போடி வரை நீட்டிக்க வேண்டுமென நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி , விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்ட மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.மதுரை, போடி ரயில்வே வழித்தடம் அகல ரயில் பாதையாக ஆக்கப்பட்டு இந்த வழித்தடத்தில் தற்போது மதுரையிலிருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடி சென்று திரும்பும் வகையில் பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது.

மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு ஒரு ரயில் இயங்கி வருகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி ,விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள். தேனி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களிலும் மூணாறு, குமுளி போன்ற கேரள நகரங்களிலும் வசித்து வருகின்றனர். இதனால் போடியில் இருந்து தங்கள் மாவட்ட நகரங்களுக்கு ரயில் சேவை எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் செங்கோட்டையில் மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை செல்லும் ரயிலை, அங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு போடியை சென்றடையும் வகையிலும் மறு மார்க்கத்தில் அதிகாலை 5 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு ஏழு மணிக்கு மதுரை வந்து வழக்கம் போல் 7:25 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் வகையில் தண்டவாளம் நீட்டிப்பு செய்து இயக்கினால், தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

மதுரைக்கு மாலை 4:15 மணிக்கு வரும் திருச்செந்தூர் , பாலக்காடு மாலை 4:45 மணிக்கு வரும் திருவனந்தபுரம் திருச்சியில் இருக்கும் இணைப்பு ரயிலாகவும் இந்த ரயில் விளங்கும். திருவனந்தபுரம், நாகர்கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயனடைவார்கள். எனவே, செங்கோட்டை, மதுரை ரயில் போடி வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  இதற்கு மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

Read Entire Article