Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்

3 hours ago
ARTICLE AD BOX

சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டு விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம். இந்நிலையில், சீமான் விவகாரத்தில், சீமான் கைது செய்யப்படவில்லை, ஆனால் அவரது வீட்டின் பாதுகாவலர் சிக்கி கொண்டது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

சீமான் வழக்கு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல நடிகை பாலியல் புகார் அளித்தார். சீமான், தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார்.

ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார், நடிகை. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு, சீமானுக்கு எதிராக பாலியல் புகாரையும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார், அதே நடிகை.

கடந்த 2011 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரை, ரத்து செய்யவேண்டும் என்று சீமான் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் , இந்த புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சீமான் பாதுகாவலர் கைது:

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது வளசரவாக்கம் காவல்துறை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி , சென்னை நீளாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் , விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டபட்டது.  ஆனால், அப்போது சீமான் வீட்டில் இருந்தவர் , நோட்டீசை கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது, நோட்டீசை கிழித்தவரையும், சீமானின் பாதுகாவலரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாவலரிடம் துப்பாக்கி  இருந்ததை பார்த்த காவல்துறையினர் , அதை பிடுங்க முயன்றபோது பெரும் தள்ளு முள்ள ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.

இந்நிலையில், துப்பாக்கி வைத்திருந்த சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் என தெரிய வந்துள்ளது . இவர் 18 வருடங்களாக, காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. இவரை கைது செய்யும் போது, தனது பாதுகாப்பாக துப்பாக்கி வைத்திருக்கிறேன் என காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

Also Read: சீமான் வீட்டிற்குச் சென்ற காவலரை நோக்கி துப்பாக்கி காட்டியவர் யார்? குவியும் நாதகவினர்.!

ஜாமீன் மறுப்பு:

அப்போது, நோட்டீஸ் கிழிப்பு விவகாரம் தொடர்பாக பாதுகாவலராக இருந்த முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ( BSF ) அம்லராஜ் மற்றும் நோட்டீசை கிழித்த சுபாஷ்  ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படட்து.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமானின் பாதுகாவலர் அம்லராஜ் மற்றும் சுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தருணத்தில் சீமான் மீதான வழக்கின் விசாரணையில், சீமான் வெளியே இருக்கிறார், அவருக்காக நோட்டீசை கிழித்தவர் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும் சிறையில் உள்ளனர் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Read Entire Article