ARTICLE AD BOX
Seeman News: சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,"9.5 லட்சம் கோடியாக தமிழ்நாட்டிற்கு கடன் தொகை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இவ்வளவு கடனை பெற்று என்ன செய்துள்ளது? பேருந்து கட்டணம், மின் கட்டணம், சொத்துவரி என எல்லா கட்டணமும் உயர்ந்துள்ளது.
Seeman News: 'கல்விக்கான நிதி எங்கு போய் சேருகிறது?'
நொய்யல் ஆற்றையே கொன்று விட்டு அதற்கு அருங்காட்சியகம் வைக்க போகிறீர்களா...? ஈழத் தமிழர்களுக்கு 87 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டி தர போவதாக அறிவித்துள்ளார்கள். 87 ஆயிரம் ரூபாயில் கழிவறை தான் கட்ட முடியும், வீடு கட்ட முடியாது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறியதில் என்ன செயல்பாட்டுக்கு வந்துள்ளது? தேர்தல் வருவதால் இது போன்ற அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள். கல்விக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது? கல்விக்கு அவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அது எங்கு போய் சேருகிறது என்று தெரியவில்லை. அமைச்சர்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்துகிறார்கள். மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லை.
Seeman News: 'ரூ' தமிழ் எழுத்து இல்லை
ரூபாயில் வரும் "ரூ" என்பது தமிழ் எழுத்து இல்லை. 'ர' என்ற எழுத்து தமிழில் துவங்காது. அப்படி இருக்கும்போது அதை தமிழ் எழுத்து என்று கூறுவதா?. சென்னை மாநகராட்சியில் கடை பலகைகளில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மேயர் பிரியா கூறி இருக்கிறார். மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா? தமிழ் பேசவே வரவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்ககூடிய நிலை உள்ளது. உங்கள் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி பாடமாக இருக்கிறது.
பாஜக மாநில அமைச்சர்கள் ஆளும் மாநிலங்களில் கூட, அம்மாநில மொழிக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கர்நாடகாவில் கூட சித்தராமையா கன்னடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை" என்றார்.
Seeman News: விஜய்க்கு பாதுகாப்பு குறித்து சீமான்
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்புக்கு ஆய்வு செய்து சென்றது குறித்து சீமான், "அது தவறில்லை. விஜய் மாதிரி ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொது வெளியில் வரும் போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை. அவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் கொடுக்கலாம். எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு" என்றார்.
மேலும் படிக்க | பாலிடெக்னிக் பசங்களா... ஆல் கிளியர் பண்ண சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க!
மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட் 2025: 'விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றம்' இபிஎஸ், அண்ணாமலை சொன்னது என்ன?
மேலும் படிக்க | Tamilnadu Agriculture Budget : விவசாயிகளுக்கான இலவச அறிவிப்புகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ